காசுக்காகக் கூத்தடிக்கிறார்கள்!- சர்காருக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் சண்முகம்!


கரு.முத்து

“கடுப்பேத்துறவங்கட்ட கம்முன்னும் உசுப்பேத்துறவங்கட்ட உம்முன்னும் இருந்துட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்” சன் பிக்சர்ஸ் தயாரிப்பான ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்படி சும்மா ஜம்முன்னு பேசியிருந்தார் விஜய். தீபாவளிக்கு வெளியான அவரது ‘சர்கார்’ இப்போது அதிமுக வட்டாரத்தை ஏகத்துக்குக் கடுப்பாக்கி இருக்கிறது. அந்தளவுக்குப் படத்தில் தமிழக அரசின் மீது தாக்குதல் தொடுக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், கடம்பூர் ராஜு, சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் சர்கார் படத்துக்கும், விஜய்க்கும் எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். “வளர்ந்துவரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல” என்று கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுக்க, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமோ, “விஜய், படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மட்டுமின்றி சர்கார் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என சீறியிருக்கிறார். மற்றவர்களை விட சி.வி.சண்முகத்தின் கருத்துகள் காட்டமாக இருந்த நிலையில் காமதேனுவுக்காக அவரிடம் பேசினேன்.

‘சர்கார்’ படத்தில் அரசுக்கு எதிராக அப்படி என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது? எதற்காக இப்படிக் கிளம்பியிருக் கிறீர்கள்?

நான் ஒண்ணு சொன்னா நீங்க அதற்கு மாற்றுக்கருத்து சொல்லலாம், விமர்சிக்கலாம், கண்டனமும் தெரிவிக்கலாம். அரசாங்கத் திட்டங்களையும் அதேபோல விமர்சிக்கலாம், கண்டனம் தெரிவிக்கலாம், மாற்றுக்கருத்து சொல்லலாம். அதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.

x