சர்க்காரிடம் சிக்கிய ‘சர்கார்’


அரசின் இலவச திட்டங்கள் மக்களை சீரழித்துவிட்டன  என்று கருத்துப் பேசியதால் கலவரமாகியிருக்கிறது விஜய்யின் ‘சர்கார்’.

முதலில் திருட்டுக் கதை என சர்ச்சையானது. கே.பாக்யராஜ் பஞ்சாயத்து பண்ண சுமுகமாகப் பிரச்சினை முடிந்து படம் வெளியானது. சுமாரான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையிலும் வெளியான முதல் நாளே தமிழ் சினிமாவில் வரலாறு காணாத முதல் நாள் வசூலை ஈட்டி சாதனை படைத்தது. அதேசமயம், தமிழக அரசின் இலவச திட்டங்களைக் கடுமையாக விமர்சித்தது ‘சர்கார்’. இது அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த ஆளாளுக்கு அறிக்கை விட்டனர்.

ஒருபக்கம் தமிழிசை  “சினிமாவில் மட்டும்தான் விஜய் முதல்வராக முடியும்” என்று கருத்து சொல்ல, மறுபக்கம், ”வளரும் நடிகரான விஜய்க்கு இது நல்லதல்ல” என்று கடம்பூர் ராஜு எச்சரிக்கை விட... மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கான்செஃப்டுகளுக்கு பஞ்சம் இல்லாமல் போனது. இதனால் சர்கார் மீண்டும் சமூக ஊடகங்களில் ட்ரெண்டானது. இறுதியாக, வெள்ளிக்கிழமை மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. அதேநேரத்தில், இயக்குநர் முருகதாஸ் முன் ஜாமீன் கேட்டிருப்பதாகவும், விஜய் முதல்வரைச் சந்திக்க முயல்வதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின.

அதிகாலை 4 மணிக்கு எழுந்து கதை எழுதும் பழக்கம் உடையவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
- செய்தி.
ராத்திரி திருடி தூங்காம எழுத ஆரம்பிச்சுடுவார் போல!
- அன்புடன் கதிர்.

x