இடையர்பாளையம் பூ.பெருமாள்சாமி பேசறனுங்க...- வாய்பிளக்க வைக்கும் வானொலிக் காதலன்!


கா.சு.வேலாயுதன்

ஆட்கள் அதிக நடமாட்டம் இல்லாத பின்மதிய நேரம். சாவகாசமாய் வந்து நிற்கிற பேருந்திலிருந்து பதற்றமாய் கீழறங்குகிறார் அந்தப் பெரியவர். சுற்றும் முற்றும் தேடிப் பார்க்கிறார். கைக்கடிகாரத்தை மாறி மாறி பார்த்தபடியே, சற்றுத் தள்ளி மரத்தடி நிழலில் இருக்கும் மேடையில் போய் அமர்கிறார்.

மருந்து மாத்திரைக்கான நேரமாய் இருக்குமோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். என்னைக் கலவரப்படுத்திய அந்தப் பெரியவர், இப்போது சாவகாசமாய் தன் கைப்பையிலிருந்து ஒரு டிரான்சிஸ்டரை எடுக்கிறார். கூடவே, ஒரு நோட்டையும் எடுத்து வைத்துக்கொண்டு, கவிதை எழுதுகிறவர்களின் மோன நிலையை நினைவுபடுத்துகிறார்.

ஆர்வம் மிகுதியாகிப் போன நான் அவரருகே செல்கிறேன். “இன்றைய வானவில் நிகழ்ச்சியில் பங்கேற்கத் தயாராக இருக்கும் நேயர்களுக்கு வணக்கம். இப்போது நீங்கள் பேசவிருக்கும் தலைப்பு ‘திறமையின் திறவுகோல்கள்’ ” என்று டிரான்சிஸ்டர் பேசுகிறது. வானொலி தொகுப்பாளினியின் குரலுக்காகவே காத்திருந்த அந்தப் பெரியவர், அவசரமாய் அலைபேசியை எடுத்து பேச ஆரம்பிக்கிறார்.

x