சைஸ் ஜீரோ - 14


ருஜுதா திவேகர்

மங்கையராய்ப் பிறப்பதே மா தவம்! இதில் ஐயம் ஒன்றும் இருக்க இயலாது. அதுவும் இந்திய தேசத்தில் பெண்தான் சக்தி, பெண்ணே காளி, ஜீவநதிகளின் அம்சமும் பெண்ணாகத்தான் இருக்கிறாள். இத்தனை இத்தனை அடையாளமாக, அடைமொழியாகப் போற்றப்படும் அளவுக்கு ‘அவள்' என்ற நிஜம் போற்றப்படுகிறதா என்றால் சாட்சிகளும் காட்சிகளும் வேறு மாதிரிதான் இருக்கின்றன.

பெண் உடலானது ஒரு குலத்தின், ஓர் இனத்தின், சாதியின் கவுரவச் சின்னமாக பார்க்கப்படுவதில் தொடங்கி அவளுக்கான கனவுகளைக்கூட அவள் சார்ந்திருக்கும் ஆண்கள் கண்டு கற்பிதம் சொல்லும் சூழலே இங்கே இருக்கிறது.

ஒரு பெண் என்ன உணவு உண்ண வேண்டும், எத்தகைய உடையை அணிய வேண்டும், அவள் உடல்வாகு எப்படி இருக்க வேண்டும்? இதையெல்லாம் சுயமாக நிர்ணயித்துக்கொள்ளும் சுதந்திரம், ஒற்றை இலக்க சதவீதத்தில்தான் இன்னமும் இருக்கிறது.

x