ரெண்டு ரூபாய்க்கு புரோட்டா!- இப்படியும் மனிதர்கள்


பாரதி.என்

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வஞ்சியாதித்தன் புதுத்தெருவில் அந்த புரோட்டா கடை. விலைவாசி விண்ணில் பறக்கும் இன்றைய சூழலிலும் இங்கே ஒரு புரோட்டா இரண்டே ரூபாய்தான்!

நாம் சென்றிருந்த நேரத்தில், பாலகிருஷ்ணன் புரோட்டா போட்டுக் கொண்டிருக்க, அவரது மனைவி லெட்சுமி, சாப்பிட வந்தவர்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்தார். பள்ளிக்கூடம் முடிந்து செல்லும் பொடிசுகளும், டியூஷனுக்குப் போகும் முன்பு இங்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.

இங்கே சப்பாத்தியும், தோசையும்கூட உண்டு. ஆனால், அவையெல்லாம் 5 ரூபாய்! புரோட்டா மட்டுமே இரண்டு ரூபாய். அது ஏன் என்ற கேள்வியோடு பேசத் துவங்கினேன். “முதல்ல சாப்பிடுங்க தம்பி” என்று சொல்லிவிட்டு பேசத் துவங்கிய பாலகிருஷ்ணன், “இந்தக் கடை ஆரம்பிச்சு 27 வருசம் ஆச்சு. நான் தீவிரமான எம்ஜிஆர் ரசிகன். அவரு படங்களைப் பார்த்துதான் எனக்கும் ஏதாவது சேவை செய்யணும்னு ஆசை. அப்படித்தான் இந்த ஹோட்டலை தொடங்குனேன். ஆரம்பத்தில் ஒரு புரோட்டா 25 காசுக்குப் போட்டேன். அப்புறம் 50 காசு, தொடர்ந்து 1 ரூபாய், அதுக்கு அப்புறம் 1.50க்குக் கூட போட்டோம். இப்போ 2 ரூபாய் ஆக்கி ஆறு வருசமாச்சு.

x