வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்கத் தயார்!- - சிரிப்பு நடிகர் சிங்கமுத்து சீரியஸ் பேட்டி!


என்.சுவாமிநாதன்

வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவை உருவாக்கப் படையில் பெரும்பங்கு வகித்தவர் சிங்கமுத்து. வடிவேலுவுடனான மோதலுக்குப் பின்னர் இணக்கம் இல்லாமல் போனதால் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. வடிவேலு இல்லாத களத்தில் சந்தானம், சூரி என அடுத்த தலைமுறையோடு கைகோத்து கலக்கி வருகிறார் சிங்கமுத்து. இன்னொருபுறம் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும் பயணிக்கிறார். அப்படி நாகர்கோவிலுக்கு அரசியல் பயணம் வந்திருந்த சிங்கமுத்துவை காமதேனுவுக்காகச் சந்தித்தேன்.

உங்களது இளமை நாட்கள் குறித்துச் சொல்லுங்களேன்..?

அப்பா பர்மால இருந்து வந்து விவசாயம் பண்ணுணாங்க. அப்போல்லாம் நெல்லு வித்தாதான் தீபாவளி. டவுசரும் சட்டையும் அப்பதான் கிடைக்கும். மூணு பொண்ணும், ரெண்டு ஆணுமா நாங்க மொத்தம் 5 பிள்ளைங்க. திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் பி.யூ.சி படிச்சேன். படிப்பைத் தொடர வசதியில்லாம அதே தேவகோட்டை_மதுரை ரூட்ல பஸ் கண்டக்டரா போனேன். தம்பி, தங்கச்சிகளை நல்லா படிக்க வச்சேன்.
அப்புறம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் அந்தோணிசாமி அரிசி மண்டியில் 6 வருசம் வேலை பார்த்தேன். மாற்று மதமா இருந்தாலும் சொந்தப் பிள்ளையாட்டம் என்னைப் பார்த்துகிட்டாரு. அப்போ 300 ரூபாய் சம்பளம். பாசமா இருந்தாலும், சம்பளமும் முக்கியம்ல? அங்கிருந்தபடிக்கி சென்னைக்குப் போயிட்டேன். அங்கே சுந்தரம் காபியில் மேனேஜரா இருந்தேன். 4000 ரூபாய்க்கு சீட்டு போட்டு, அந்தப் பணத்தில் சென்னை எம்ஜிஆர் நகர்ல அரிசி மண்டி போட்டேன். 2000 ரூபாய் கடை அட்வான்ஸ், 2000 ரூபாய்க்கு தராசு, கல்லாப்பெட்டி வாங்குனேன். அரிசி வாங்க காசில்லை. திருச்சியில் இருந்தப்ப எனக்கு பழக்கமான 15 பேரு, ஆளுக்கு தலா 10 மூட்டை வீதம் அரிசி கொடுத்தாங்க. அதை வித்து வித்து அவங்களுக்குப் பணத்தைக் குடுத்தேன். அப்படியே கொஞ்ச நாள்ல ரியல் எஸ்டேட்ல இறங்கிட்டேன்.

x