பிடித்தவை 10- எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி


விருத்தாசலத்தில் வசிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியை தமிழ்ச்செல்வி. மாணிக்கம், கீதாரி, கற்றாழை உள்பட எட்டு நாவல்கள், இரு சிறுகதை தொகுப்புக்களுக்குச் சொந்தக்காரர். இவரது படைப்புகளை முன்வைத்து பலரும் முனைவர், இளம் முனைவர் பட்ட ஆய்வுகள் செய்துள்ளனர்.

இவரது படைப்புகள் பல்கலைக்கழக பாடத்திட்டங்களிலும் இடம் பெற்றுள்ளன. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருது, தமுஎகச விருது, கலைஞர் பொற்கிழி விருது உள்ளிட்ட விருதுகளையும் குவித்துள்ளவரின் பிடித்தவை பத்து இங்கே…

ஆளுமை:  ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவ சமூகம் காண விரும்பிய காரல் மார்க்ஸ், லெனின், மாவோ, இவர்களுடன் சுதந்திரப் போராட்டத்தை அறவழியில் நடத்தி ஜெயித்த மகாத்மா, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், காமராசர், கருணாநிதி ஆகியோரும் பிடித்த ஆளுமைகள்.
நூல்கள்: மிகத் தொன்மையான அழகைக்கொண்ட தமிழர்களின் அகம், புறம் இரண்டையும் பேசும் சங்கப் பாடல்கள், இரண்டு வரிகளுக்குள் அர்த்தங்களைப் பொதிந்த திருக்குறள், சிங்கிஸ் ஜத் மாத்தவ்வின் முதல் ஆசிரியர், எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் புதினம்.

வளர்ப்புப் பிராணிகள்: எனது வாழ்வின் பகுதியாக ஆடு, மாடுகளும் இருந்திருக்கின்றன. இப்போது நகர்ப்பகுதியில் இருப்பதால் ஒரு பசுவைக்கூட வளர்க்க முடியாத சூழல். ஆனாலும் வான்கோழி, நாய், பூனைகளும் புழங்கும் வீடு எங்களுடையது. வீடு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல என நம்புபவள் நான்.

x