பிடித்தவை 10- எழுத்தாளர் சு.பாத்திமா


என்.சுவாமிநாதன்

கேரள மாநிலம், பாலக்காடு சித்தூர் அரசுக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியை சு.பாத்திமா சிறந்த மொழிபெயர்ப்பாளர். மலையாளத்திலிருந்து தமிழுக்கு ‘அகாலம் – ஹபீஸி’ என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து இன்னும் சில புதினங்கள் இவரது மொழிபெயர்ப்பில் அச்சுக்குக் காத்திருக்கின்றன.

தமிழ் மற்றும் மலையாள இலக்கிய உலகில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புகள் குறித்து ஏராளமான பயிற்சிப் பட்டறைகளும் நடத்தியுள்ளார். சிறந்த விமர்சகரான இவர் அவைகளை முன்வைத்து 25-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் மலையாள முன்னணி பத்திரிகைகள் பலவற்றிலும் வெளியாகியுள்ளன. இவருக்குப் பிடித்தவை பத்து இங்கே...

ஆளுமை: அன்னை தெரசாவும், அப்துல்கலாமும்! கடின உழைப்பு, எளிமை, அடக்கம், அமைதி, விடாமுயற்சி இவையெல்லாம்தான் இவர்களிடம் என்னை ஈர்த்தது.
கவிஞர்கள்: வைரமுத்து மற்றும் சிற்பி பாலசுப்பிரமணியம். இவர்கள் இருவரது கவிதை வரிகளிலும் ஆழமும், அர்த்தமுள்ள பொருளும் பொதிந்திருக்கும். வைரமுத்துவின் வரிகளில் வார்த்தை ஜாலங்கள் மின்னுவது ஈர்க்கும்.

x