சிபிஆரா... வானதி சீனிவாசனா..? - கோஷ்டி தர்பாரில் கோவை பாஜக!


கா.சு.வேலாயுதன்

பாஜகவின் முன்னாள் எம்பி-யான சி.பி.ராதாகிருஷ்ணன் (சிபிஆர்) கோவையில் திடீரெனக் கொண்டாடிய மணி விழா, கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக களமிறக்கப் போவது சிபிஆரையா, வானதி சீனிவாசனையா என்ற விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

1998 மற்றும் 1999 ஆகிய தேர்தல்களில் கோவை மக்களவைத் தொகுதியில் வென்றவர் சிபிஆர். அதன் பின்னணியில் தமிழக பாஜகவின் தலைவராகவும் வந்தவர். 1999க்குப் பிறகு நடந்த மக்களவைத் தேர்தல்களிலும் இதே தொகுதியில் போட்டியிட்டாலும் உள்குத்து அரசியலால் கரைசேர முடியாமல் போனார். 

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிடம் சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். பாஜக ஆட்சி அமைந்தால் சிபிஆர் மத்திய அமைச்சராகிவிடுவார் என்ற பதைபதைப்பில் பாஜக-வுக்குள்ளேயே சிலர் செய்த உள்ளடி வேலைகள்தான் சிபிஆரை கடந்த முறை தோற்கடித்தது என்று கோவை பாஜக-வினர் இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் தோற்றாலும் அவரை கயிறு வாரியத் தலைவராக்கி கவுரவித்தது தலைமை. வாரியத்தின் தலைமை அலுவலகம் கேரளத்தில் இருப்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பகுதி நேர அரசியல்வாதி போலத்தான் கோவைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார் சிபிஆர்.

x