ஆயிரம் பேர் வாங்கிய அபூர்வ குமாரு!


கடந்த வாரம் இணையத்தின் அகில உலக சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார். மீம்ஸ் வளத்துறை அமைச்சர் குமார், நாக் அவுட் குமார், ஆடியோ மார்பிங் குமார், மைக் குமார், மைக் டைசன் குமார் என  ஒரே வாரத்தில் எத்தனை பெயர்கள். இதில் மற்றவர்கள் வைத்தது பாதி பெயர் என்றால், அதற்கு கவுன்டர் கொடுத்து அவரே தனக்கு வைத்துக்கொண்ட பெயர்கள் மீதி. கடந்த வாரத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் என எல்லாவற்றிலுமே அண்ணன்தான் டாப். என்ன கேள்வி கேட்டாலும் நக்கலாய் கமென்ட் கொடுப்பது ஜெயக்குமார் பாணி. அவருடைய இந்தத் திறமையே அவரை இன்றைய மீம்ஸ் உலகின் முடிசூடா மன்னனாக மாற்றியிருக்கிறது. தமிழக அரசியலில் விஜயகாந்துக்குப் பிறகு அதிகமாக மீம்ஸ் உருவாக்கப்பட்டது இவருக்காகத்தான் இருக்கும்!

சர்கார் திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு. ‘செங்கோல்’ என்ற பெயரில், தான் எழுதிய கதையைத் திருடி, சர்கார் படத்தைத் தயாரித்து வருவதாக வருண் என்கிற ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்துள்ளார். 
- செய்தி.
விளம்பரம் பண்ண ஆரம்பிச்சுட்டானுக, டேய்... இது சன் பிக்சர்ஸ் படம்டா.
- சக்திமான்.

அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.
- டிடிவி தினகரன்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.
- விக்கி டாக்ஸ்.

``ஏழை, பணக்காரர் இடையிலான வித்தியாசத்தைக் குறைத்தவர்''- மோடிக்கு 2018-க்கான சியோல் அமைதி விருது.
- செய்தி.
பெட்ரோல், டீசலுக்கு  இடையிலான  விலை    வித்தியாசத்தைக் குறைத்தவர் என்று சொல்லியிருந்தாலாவது பொருத்தமாக இருந்திருக்கும்.
- ரஹீம் கஸாலி.

x