பிடித்தவை 10- எழுத்தாளர் ஜீவா


நாகர்கோவிலை அடுத்த முகிலன்விளையைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ஜீவா. தனியார் கல்லூரி ஒன்றில் நுண்ணுயிரியல் துறைத் தலைவராக இருக்கும் இவர், ‘தற்கொலைக் கடிதம்’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்கும், ’தப்பித்தலென்பது வாய்க்கப் போவதில்லை’ என்னும் கவிதைத் தொகுப்புக்கும் சொந்தக்காரர்.  ‘இலைகள்’ எனும் இலக்கிய அமைப்பில் இணைந்து செயல்பட்டுவரும் ஜீவா, 2015-ம் ஆண்டின் மின்தமிழ் இலக்கியப் போட்டி, தெற்கு எழுத்தாளர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்குப் பிடித்தவை பத்து இங்கே… 

ஆளுமை: தந்தை பெரியார். பெண்களுக்கு உண்மையான விடுதலையை உணர்த்திய ஆண் என்ற வகையில் அவரை ரொம்பப் பிடிக்கும். பெண் விடுதலையில் அவரது பங்கும், அயராத உழைப்பும் பிரமிக்க வைக்கும். 

கதை: ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’, சிவராஜின் ‘காரிச்சாமியும் செவலைக்காளையும்’, லஷ்மி சிவக்குமாரின் ‘லங்கூர்’, கிருஷ்ணகோபாலின் ’உயிர்த்தெழல்’, மலர்வதியின் ‘கருப்பட்டி’, உஷாதேவியின் ‘வீடு பள்ளத்தில் இருக்கிறது’ ஆகியவை. 

தலம்: குமரகம் படகு இல்லம். இயற்கை அன்னையின் மடியில் நீரில் மிதந்துகொண்டே நதி மீனை சுவைத்து, புதுவிடியலின் போது கொக்கு, நாரைகளின் பறத்தலை ரசிப்பது அலாதியான இன்பம். 

x