இயற்கைக்கு நம்மால் முடிந்ததைச் செய்வோம் - தமிழ் கலெக்டரின் ‘சி5’ சீக்ரெட்ஸ்


என்.சுவாமிநாதன்

பருவநிலை மாற்றத்தால் அண்மையில் கடும் பாதிப்புக்கு உள்ளான மாநிலம் கேரளம். ஒகி புயலின் கோரதாண்டவமும், அதன் பின்பு வாட்டி எடுத்த பெருமழையும் கடவுளின் தேசத்தை சாத்தான்கள் விளையாடிய மைதானமாக மாற்றிப் போட்டது. இந்தச் சூழலில் இப்போது மிகவும் அவசியமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரப் பணியைக் கையிலெடுத்து களத்தில் நிற்கிறார் திருவனந்தபுரம் ஆட்சியர் வாசுகி. இவர் சென்னையைச் சேர்ந்த தமிழ் பெண்மணி என்பது நமக்கு கூடுதல் பெருமை!

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய புரிதலை பொதுமக்களிடையே உருவாக்க தனது சொந்த முயற்சியால் ‘சி5’ என்னும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார் வாசுகி. ‘Change Can Change Climate Change’ என்பதன் சுருக்கமே ‘சி5’. ஆட்சியரின் முகாம் இல்லம் அமைந்துள்ள ஐவஹர்நகர் பகுதியில் இதை சோதனை முறையில் செய்து, சாதித்தும் இருக்கிறது இந்த அமைப்பு. இதன் தொடர்ச்சியாக தற்போது திருவனந்தபுரம் அரசு கண் மருத்துவமனையை ஒட்டிய குப்பை கிடங்கை சுகாதாரமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

குப்பை சேரும் இடங்களில் எல்லாம் அதிலிருந்து மட்கும் உரங்களை எடுத்து, அதே பகுதியில் பூங்கா அமைக்கின்றனர். இந்தத் திட்டத்திற்கு ‘உத்யானம்’ (பூங்கா) எனப் பெயர் வைத்துள்ளனர். அப்படியான ஒரு பணியின் போது, திருவனந்தபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் வாசுகியைச் சந்தித்தேன். உற்சாகத்துடன் என்னோடு உரையாடினார்.

x