அப்படி நம்புவது தமிழக காங்கிரஸாரின் அப்பாவித்தனம்- சசி தரூர் பேட்டி


ந.வினோத் குமார்

சென்னையில் கடந்த வாரம் ‘தி இந்து’ நடத்திய ‘டயலாக் 2018’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கியவரை, “சார்… இன்டர்வியூ...” என்றதும், “ஆஃப்டர் டின்னர்… வெரி ப்ரீஃப்லி’’ என்றார் சசி தரூர்.

அமெரிக்காவில் படிப்பு, ஐ.நா. மன்றப் பணியிலிருந்து ஓய்வு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர், முன்னாள் மத்திய வெளியுறவு மற்றும் மனித வளத் துறை இணை அமைச்சர், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல ‘கிரெடிட்’களைத் தன் ‘புரொஃபைலில்’ வைத்திருப்பவர் சசி தரூர். கூடவே, சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் என்ற அடையாளங்களையும் கொண்டிருப்பவர்.

‘தான் எப்படி ‘லைம் லைட்டில்’ இருக்கலாம்’ என்று யோசிக்கும் எம்பி-க்கள் மத்தியில், நாடாளுமன்றம் கூடும் நாட்கள் குறைந்து வருவது பற்றிக் கவலைப்படுபவர். “நமது பிரதமர், குஜராத் முதல்வராக இருந்தபோது, அங்கே சட்டமன்றம் கூடும் நாட்களும் குறைவாகத்தான் இருந்தன” என்று கலந்துரையாடலின்போது அவர் சொல்ல, அரங்கமே அதிர்ந்தது!

x