எங்கும் ‘96’ மயம்


காதலே... காதலே... என்ற பாடலை முணுமுணுக்காத உதடுகளே இல்லையென்று சொல்லுமளவுக்கு எங்கும் ‘96’ மயம்தான். 

பள்ளிப்பருவக் காதலை முன் வைத்து சமீபத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த வாரம் முழுவதும் சமூக வலைதளங்களில் பல்வேறு சமூக, அரசியல் விவகாரங்களுக்கு மத்தியல் அதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் மீம் போடப்பட்ட விஷயமாக  ‘96’ படம் இருந்தது. ஒருபக்கம் பழைய காதலிகளைப் பற்றிய கதைகள் ஓட, மறுபக்கம் சிங்கிளாக இருப்பவர்களும், பாய்ஸ் ஸ்கூலில் படித்தவர்களும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘தோழிக்கு நான் எங்கடா போவேன்?’ என்று பீல் பண்ணுவதுமாக சமூக வலைதளமே ஒரே ஃபீலிங்ஸ் மயமானது. #96  #சிங்கிள்ஸ், #90கிட்ஸ் #காதலே...காதலே... போன்ற ஹேஷ்டேக்குகள் அதிகம் ட்ரெண்டாகின. 

மதுரை செல்லூரில் வீடுகளில் நீர் புகுந்தது.
- செய்தி
செல்லூர் ராஜூ சென்னைக்கு வந்துவிட்ட தைரியத்தில் நீர் ஊருக்குள் புகுந்துவிட்டது.
- மதுரைக்காரன்

திருமணமாகி இரண்டு ஆண்டுகளான பெண் தனது கல்லூரி காதலனுடன் ஓட்டம்.
- செய்தி
ஆஹா!! ‘96’ படம் எஃபெக்ட் காட்ட ஆரம்பிச்சிருச்சி போலயே! சட்டம் வேற துணை இருக்கே.
- மித்ரன்

x