அரியநாச்சி 11- வேல ராமமூர்த்தி


திசை மாறி அடிக்குது 

“இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கமுதி சப் தாலுகா பெருநாழி கிராமத்தைச் சேர்ந்த, விவசாயம்… வெள்ளையத்தேவனின் இளைய மகள் மாயழகி என்கிற மணவாட்டியை மேற்படி மாவட்டம் மேற்படி தாலுகா மேற்படி சப் தாலுகா பெருநாழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயம்… மலையாண்டித் தேவனின் ஒரே மகன் கருப்பையா என்கிற மணவாளன்… பெண் பேசி முடித்துப் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் செய்ய, சாதி உறவுமுறை வழக்கப்படி போடுகிற பருசம். ஒன்று… பத்து… நூறு… ஆயிரம்… லட்சம் பொன்…”

கொல்லை வரை கேட்க, சபை நிறைய உரக்கக் கூவி, கையில் இருந்த ஒத்த ரூபாய் காசை, வெண்கலக் கும்பாவில் ‘ணங்ங்…’ எனப் போட்டார் கோவிந்தத் தேவர்.

“தட்டுகளை மாத்திக்கங்கப்பா” என்றார்.

x