ஜனவரிக்குள் ஆட்சி கவிழ்ப்பு?- திட்டம் போடும் திமுக - தினகரன்!


குள.சண்முகசுந்தரம்

“கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி என்னை ரகசியமாகச் சந்தித்துப் பேசினார் ஓபிஎஸ்.” டிடிவி தினகரன் திடீரென எடுத்து வீசியிருக்கும் இந்த அதிரடி அணுகுண்டு அதிமுக-வுக்குள் ஏகப்பட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

“ஓபிஎஸ் தான் தினகரனை தேடிவந்து சந்தித்தார்” என்கிறது தினகரன் தரப்பு. “இல்லை... இல்லை... மனம் விட்டுப் பேசவேண்டும் என்று சொல்லி தினகரன் தான் ஓபிஎஸ்-ஸை சந்தித்தார்” என்கிறது ஓபிஎஸ் தரப்பு. எப்படியோ, தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு நடந்திருக்கிறது. ஓபிஎஸ்-ஸின் திரைமறைவு காரியங்களை கவனிக்கும் கான்ட்ராக்டர் அவர். ஒரு வகையில் தினகரனுக்கும் நண்பர்தான். அவர் மூலமாகத்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடானதாகச் சொல்கிறார்கள். கோட்டூர்புரத்தில் உள்ள அந்த கான்ட்ராக்டரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.

நிறைய பேசினார்

x