உம்முனு கம்முனு ஜம்முனு!


கடந்த வாரம் முழுவதும் சமூக வலைதளங்களில் இந்த வார்த்தைகள்தான் வைரலாகின. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கும் விஜய்யின் சர்கார் பட இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் நடந்தது.
சற்று வித்தியாசமாக பாடல்களை ரசிகர்கள் மூலமே வெளியிட்டனர்.  எப்போதும் அமைதிப் பூங்காவாக இருக்கும் விஜய்க்கு மேடையேறினாலே வீரம் வருவது வழக்கமாகி விட்டது. இந்த விழாவிலும் மைக்கைப் பிடித்தவர், தமிழக அரசியலில் பெரும் களேபரத்தைக் கிளப்பிவிட்டார். மறைமுகமாகப் தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சிக்கும்படியாக அவர் பேச்சு இருந்ததால் அரசியல்வாதிகள் கடுப்பாகி, ஆளுக்கொரு பக்கம் விஜய்யை விமர்சித்து பேட்டி கொடுத்தனர். ஏற்கெனவே விஜய்யின் பேச்சைக் கேட்டு வீறு கொண்டிருந்த ‘தளபதி’ ரசிகர்கள், அரசியல்வாதிகள் செய்த விமர்சனங்களை எல்லாம் நன்றாகவே வெச்சு செய்தனர். இதனால் ‘சர்கார்’ கடந்த வாரம் உலக ட்ரெண்டானது.

விரைவில் பணவீக்கம் குறையும்.
- அருண் ஜேட்லி
ஒத்தடம் கொடுப்பாரு போல..! 
- ஷிவானி சிவக்குமார்

ஊழல் எங்கு நடக்கிறது என்று நடிகர் விஜய் குறிப்பிட்டுச் சொன்னால் மாலை அணிவிப்பேன்.
 - பொன் ராதாகிருஷ்ணன் 
முதல்ல ரஃபேல் ஊழல குறிப்பிட்டுச் சொன்ன ராகுல் காந்திக்கு மாலைபோட்டு கவுரவப்படுத்துங்க.
 - குழலமுதன்

இடைத்தேர்தல் எப்பொழுது வந்தாலும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்.
- ஓ.பி.எஸ்  
பாஜக-வுல தமிழிசை அக்கா எப்படியோ அதிமுக-வுல இவுக!!- மித்ரன்

x