சுட்டிக் குழந்தைகளைக் காப்பது எப்படி?


பி.எம்.சுதிர்

குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். அவர்களின் எந்தச் செயல்பாடுகளும் பெரியவர்களை விட வேகமானதாக இருக்கும். இதனாலேயே பெரியவர்களை விட அதிகமாகக் கீழே விழுவது, தீப்புண் படுவது, ஷாக் அடிப்பது என்று பல ஆபத்துகளில் அவர்கள் அடிக்கடி சிக்கிக் கொள்கிறார்கள். இவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பதில் பெற்றோருக்கு பெரும் பங்கு உள்ளது. அந்த வகையில் குழந்தைகளை ஆபத்துகளில் இருந்து காப்பது எப்படி என்று பார்ப்போம்...

குழந்தைகளைத் தனியாக விடாதீர்கள்

நடக்கும்போது பெரியவர்களே தெரியாமல் அடிக்கடி தடுக்கி விழும்போது, குழந்தைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. குறிப்பாக 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கீழே விழுவதால் அதிக காயங்கள் ஏற்படும். இந்தக் காயங்களில் அதிலிருந்து அவர்களைப் காப்பது சவாலான விஷயம்தான்!
கீழே விழுந்து குழந்தைகள் அடிபடாமல் இருக்க, முடிந்தவரை 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை படுக்கை, டைனிங் டேபிள், ஊஞ்சல், நாற்காலிகள் போன்ற இடங்களில் தனியாக விட்டுச் செல்லக் கூடாது. யாராவது ஒருவரின் கண்காணிப்பிலேயே குழந்தை எப்போதும் இருக்க வேண்டும். அதிலும் அப்படி உயரமான இடத்தில் இருக்கும்போது அவர்களின் வாயில் ஸ்பூன், பேனா, பொம்மை போன்ற கடினமான பொருட்கள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அவை, குழந்தைகள் கீழே விழ நேரிட்டால் அதிகமான காயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

x