குடும்பத்துக்குள்ள குண்டு வீசுறாங்க!


குடும்பத்துக்குள்ள குண்டு வீசுறாங்க!

இருப்பதே போதும். இதற்கு மேல் தனக்கு பதவியும் வேண்டாம் பதவிசும் வேண்டாம் என்ற மன நிலைக்கு வந்துவிட்டாலும் மகன் ரவீந்திரநாத்தை தனது அரசியல் வாரிசாக்கத் துடிக்கிறாராம் துணை முதல்வர் ஓபிஎஸ். மகனை தேனி தொகுதிக்கு எம்பி-யாக்கி மத்திய அமைச்சராகவும் அழகுபார்க்க வேண்டும் என்பது அண்ணனின் கனவு. ஆனால், அதைக் கலைக்கும் விதமாக சிலர் குடும்பத்துக் குள்ளேயே குண்டு வீசுகிறார்களாம். ஓபிஎஸ்-ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் மாவட்டத்தில் உள்ள பல கோயில்களுக்கு திருப்பணிக்குழுத் தலைவர், அன்னதானக்குழு அமைப்பாளர். பக்கா ஆன்மிகவாதியாக வலம் வரும் இவருக்கு யாராவது வணக்கம் வைத்தால் காரைவிட்டு கீழே இறங்கியே வந்து பதில் கும்பிடு போடுவார். தந்தையைப் போல இல்லாமல் தாராளம் காட்டும் இவரை, “நீங்க எம்பி-க்குபோட்டியிட்டீங்கன்னா... தினகரன் கட்சிக்காரங்களும் உங்களுக்கு ஓட்டுப் போடுவாங்க தம்பி. அதனால நீங்களே நில்லுங்க. அண்ணனுக்கு வேற பதவி பாத்துக்கலாம்” என்று சிலர் கொம்பு சீவுகிறார்களாம்.

சுற்றம் இழக்கும் முற்றம்!

x