அசோகமித்ரன் விருது விழா- கரையாத நிஜம்!


நவீனத் தமிழ் உரைநடை இலக்கியத்தில் மிக முக்கியமான பங்களிப்புச் செய்தவர் அசோகமித்திரன். 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் இயங்கியவர். அவரது நினைவாக ஞாநியின் ‘கோலம்’ அறக்கட்டளை நமது ‘காமதேனு’ இதழுடன் இணைந்து ‘அசோகமித்திரன் சிறுகதைப் போட்டி -2018’ ஐ அறிவித்திருந்தது.

இந்தப் போட்டியை இரு பிரிவாக வகைப்படுத்தி இருந்தனர். நேரடிப் (பிரசுரமாகாத) போட்டியில் பங்குபெறும் சிறுகதைகளில் சிறந்த 3 கதைகளுக்கு சிறப்புப் பரிசு வழங்குவது போலவே, பிற இதழ்களில் பிரசுரமான 3 கதைகளில் சிறந்த 3 கதைகளுக்கும் சிறப்புப் பரிசினை அறிவித்திருந்தனர்.

போட்டிக்கு வந்த நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகளை பத்மா ஞாநி, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, மானா பாஸ்கரன், பரிமளா ஆகியோர் நடுவர்களாக இருந்து தேர்ந்தெடுத்தனர்.

நேரடிச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை ‘நதி போகும் கூழாங்கல்’ கதையை எழுதிய எம்.பாஸ்கர், இரண்டாம் பரிசை ‘கூட்டுக் குடும்பம்’ கதையை எழுதிய டி.சீனிவாசன், மூன்றாம் பரிசை ‘மேரி பிஸ்கட்டும் மங்களம் ஆச்சியும்’ கதையை எழுதிய பிரவீன் குமார் ஆகியோர் பெறுகின்றனர்.

x