பிடித்தவை 10: எழுத்தாளர் நித்யா பாலாஜி


சென்னை மணப்பாக்கத்தில் வசிக்கும் குடும்பத்தலைவியான நித்யா பாலாஜி பன்முகத்தன்மை கொண்டவர். பல முன்னணி இதழ்களிலும் சிறுகதை, நாவல் வடிவில் புனைவுலகம் பேசிவரும் இவர், ‘பட்டாம்பூச்சி மனசு' என்னும் சிறுகதைத் தொகுப்புக்கும் சொந்தக்காரர். தேர்ந்த கட்டுரை யாளரும்கூட!

மனித உறவுகளைப் போற்றும், எளிய மனிதர்களின் கதைகளை அதிகம் எழுதும் குறிக்கோளோடு இயங்கும் இவர், பள்ளிக்காலம் தொட்டு, இப்போதுவரை பத்திரிகைகளால் நடத்தப்படும் சிறுகதைப்போட்டிகளிலும் பரிசுகளைக் குவித்து வருகிறார். இதேபோல் ‘கிச்சன் கில்லாடி’யான இவரது சமையல் குறிப்புகளும் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் சமையல் குறிப்புகளுக்காக பிரத்யேக வலை தளமும் நடத்தும் நித்யா பாலாஜிக்கு பிடித்தவை பத்து இங்கே…

ஆளுமை: ‘பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா,’ என்று உணர்ச்சியூட்டிய மகாகவி பாரதி. அவர் பெயரை உச்சரிக்கும்போதே 
வீரம் பிறக்கும்.

தலம்: அமைதியும், ஆன்மிகமும் தவழும் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம். ஊதுபத்தி வாசத்துடன், மலர்களின் வாசமும் இணைந்து நம்மை அறியாமலேயே தியானத்தில் ஆழ்த்தும்.

x