த்ரீ ரோஸஸ் ரகசியம்
டெல்டா மாவட்டம் ஒன்றில் அதிகாரம் செலுத்தும் காவல்துறை உயர் அதிகாரி அவர். காவல் பணியைத் தவிர காப்பியம் படைப்பதிலும் கைதேர்ந்த அந்த அதிகாரி, தனது ஆளுகைக்குள் பணி செய்யும் பெண் சார்பு ஆய்வாளர்கள் மூன்று பேரிடம் அநியாயத்துக்கு சரண்டர் ஆகிக் கிடப்பதாகக் கிசுகிசுக்கும் காக்கிகள் வட்டாரம், அந்த மூவரையும் ‘த்ரீ ரோஸஸ்’ என்றும் வர்ணிக்கிறார்கள். இந்த ‘த்ரீ ரோஸ்’களுக்கு எதிராக மாவட்டத் எந்தப் புகார் வந்தாலும் தலைமையிடத்துப் பூசாரிகள் சாமர்த்தியமாய் தவிர்த்துவிடுகிறார்களாம்.
என்னமா யோசிக்காங்கப்பா!
சன் டிவி-யில் விரைவில், `நாம் ஒருவர்’ என்ற விவாத நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறவர் நடிகர் விஷால். இது அறியப்பட்ட செய்தி. கிட்டத்தட்ட இதேபோல் ஒரு நிகழ்ச்சி ஜெயா ப்ளஸ் சேனலுக்காக ‘உன்னை அறிந்தால்’ என்ற தலைப்பில் தயாராகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறவர் யார் தெரியுமா? நடிகை வரலட்சுமி சரத்குமார். என்னமா யோசிக்காங்கப்பா! சன் டிவி-யில் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரெகோ. நாகர்கோவில்காரரான இவரை வைத்து ஜெயா ப்ளஸ் சேனலில் அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தும்படி சசிகலா யோசனை சொன்னாராம். அதன்படிதான் இப்போது ஜெயா ப்ளஸ் சேனலில் ‘கேள்விகள் ஆயிரம்’ என்ற விவாத நிகழ்ச் சியை நடத்திக்கொண்டிருக்கிறார் ரெகோ.