அரியநாச்சி 9- வேல ராமமூர்த்தி


தீண்டாத மேனி! தீராத தாபம்!

உள்வீட்டுக்குள்ளிருந்து, “மாயழகிப் பிள்ள வர மாட்டேங்குது” என சோலையம்மா கிழவி கத்தியது, முற்றத்தில் கூடியிருந்த பெரிய ஆம்பளைகள் காதில் விழவில்லை.

சோலையம்மா கிழவியின் முதுகில், உள்ளங்கை விரித்து ஓங்கி அறைந்தாள் ஒரு கிழவி. “பொறுவேன்… நீ ஏன் ‘உஸ்ஸ்’ காட்டிவிடுறே? ஆம்பளைகளுக்குத் தெரிஞ்சா என்னமோ ஏதோன்னு பதறப்போறாங்க.”

கூட்டாளிக் குமரிகள், பெரிய பொம்பளைகள் எல்லாம் எம்புட்டுச் சொல்லியும் அலங்காரம் பண்ணிக்கொள்ள மாயழகி அசைந்துகொடுக்கவில்லை.
மாயழகியை நெருக்கி அமர்ந்த சோலையம்மா, “ஏத்தே… மாயழகி… ஏன் கருப்பையா பயலுக்கு வாக்கப்பட பிரியமில்லையா ஒனக்கு?” முதுகைத் தடவினாள்.
குத்துக்கண் பார்வையோடு, உதடு பிரிக்காமல் அமர்ந்திருந்தாள் மாயழகி.

x