சாதனைப் பெண்மணி!


ஆளில்லா விமானத் தயாரிப்புத் துறையில் இடம்பிடிக்கும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சோனல் பெய்த். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர், சிறுவயதிலிருந்தே விமானத் துறையில் சோனலுக்கு ஒரு ஈர்ப்பு. அதற்காகவே ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்தவர், ஹெச்ஏஎல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் அமெரிக்காவில் தொழில்நுட்ப மேலாண்மை முதுகலைப் பட்டமும் படித்தார்.

தற்போது அமெரிக்காவின்  ‘கிட்டிஹாக்’ எனும் ஆளில்லா விமானத் தயாரிப்பு நிறுவனத்தில் ஸ்ட்ரேட்டஜிக் ஆபரேஷன் மற்றும் புராடெக்ட் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இவருக்கு இந்த ஆண்டுக்கான ஆளில்லா விமானத் தயாரிப்புத் துறைக்கான பெண்கள் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியரும் இவர்தான்.

x