கேரளத்து நெசவு வேட்டி சேலைகளுக்குத் தனி வரவேற்பு உண்டு. கேரளாவில் நெசவுக்குப் பேர்போன இடம் எர்ணாகுளம் சேந்தமங்கலம். சமீபத்தில் கேரளாவை துவம்சம் செய்த வெள்ளம் நெசவுத் தொழிலையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. இதனால் செய்வதறியாது திகைத்து நிற்கும் நெசவுத் தொழிலாளிகளுக்காக கேரள சினிமா நட்சத்திரங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
‘சேவ் தி லூம்’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ‘சேந்தமங்கலம் நெசவாளர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்’ என்று நடிகர் இந்திரஜித்தும் அவரது மனைவி பூர்ணிமாவும் முன்னெடுத்தனர். இதில் பிரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா, பிரியா வாரியர், நிவின் பாலி, ஸ்மிதா கோந்த்கர், ஜான்வி கபூர் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் பங்கெடுத்தனர். நெசவாளர்களுக்காக ஆதரவு வேண்டி நட்சத்திரங்கள் நடத்திய இந்த விழிப்புணர்வு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு ட்ரெண்டானது.
இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்.- தமிழிசை
அப்படியே வண்டிக்கு பெட்ரோலும் ஃபுல் பண்ணி குடுக்கச் சொல்லுங்க மேடம்.- அஜ்மல்