பிடித்தவை 10 - எழுத்தாளர் ஐ.கிருத்திகா


திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையைச் சேர்ந்த ஐ.கிருத்திகா டிப்ளமோ படித்தவர். தற்போது திருச்சியில் வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த இருபது வருடங்களாக புனைவுலகில் இயங்கிவரும் இவரிடமிருந்து எண்பதுக்கும் அதிகமான சிறுகதைகளும், ஆறு நாவல்களும் வெளிவந்துள்ளன. பல முன்னணி இதழ்களிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். சிறுகதை போட்டிகளிலும் தொடர் வெற்றி பெற்று அசத்தும் கிருத்திகாவின் பிடித்தவை பத்து இங்கே…

டித்த ஆளுமை: காமராஜர். எளிமையின் மறுஉருவம். அப்பழுக்கில்லாத தூயவர், மக்கள் நலன் பேணிய மாசற்ற தங்கம் என ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.

பிடித்த உணவு: அனைத்து சைவ உணவுகளும் பிடிக்கும். அம்மா செய்யும் அதிரசமும், மாமியாரின் வேணவமும் (அரிசிமாவு, வெண்ணெய், சர்க்கரை, பாசிப்பருப்பு சேர்த்து செய்யப்படும் பலகாரம்) ரொம்பப் பிடிக்கும்.

பிடித்த சூழல்: கற்பனையில் சஞ்சரித்து கதைகள் செய்யும் இடம் எதுவோ அதுவெல்லாம் மனதுக்குப் பிடித்த சூழல்தான்.

x