அதெல்லாம் அந்தக் காலம்!


குன்றத்தில் குஸ்தி தர்பார்!

திருப்பரங்குன்றம் தொகுதியில் யாருடைய ஆதரவாளரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவுக்கும் அதிகார யுத்தம் தொடங்கிவிட்டது. இதுநாள் வரை அமைச்சர் மட்டுமே இடைத்தேர்தல் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். இப்போது செல்லப்பாவும் மீடியாக்களிடம் தேர்தல் விஷயமாகப் பேசுகிறார். தலைமை யாரை நிறுத்துகிறதோ அவர்களை ஜெயிக்க வைப்பதுதான் நமது வேலை” என்று இருவருமே வெளியில் சொல்லிக்கொண்டாலும் உள்ளுக்குள் ஆளுக்கொரு ஆளை பிடித்துவைத்துக் கொண்டு அவரைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனத் தலைமைக்கு பிரஷர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். இந்த கும்மாங்குத்துகளை எல்லாம் பார்த்துவிட்டு கூடுதல் கொண்டாட்டத்தில் இருக்கிறது குக்கர் கட்சி!

அதெல்லாம் அந்தக் காலம்!

அமைச்சர் செல்லூர் ராஜூவின் அம்மா இறந்த துக்கம் விசாரிப்பதற்காக சமீபத்தில் அமைச்சர் வீட்டுக்கே சென்றார் மு.க.அழகிரி. முதலில் ராஜூவிடம் போனில்தான் துக்கம் விசாரித்தாராம் அழகிரி. அதில் நெகிழ்ந்துபோன ராஜூ, “வீட்டுக்கு வாங்கண்ணே...” என்று அன்பொழுக அழைத்தாராம்.

x