சைஸ் ஜீரோ 8- கொழுப்பு நல்லது!


ருஜுதா திவேகர்

இது ஏதோ கறை நல்லது வகையறா விளம்பரம் மாதிரி இருக்கிறதே என நினைக்காதீர்கள். இது நிச்சயமாக விளம்பரம் அல்ல. இதுவே நிஜம்.

உங்களுக்கு கொழுப்பு இருக்கிறதா... அது கட்டுப்பாடுடன் இருக்கிறது என்றால் உங்கள் உடல் நிச்சயமாக கட்டுக்கோப்பாக இருக்கிறது என்று அர்த்தம். உடலில் சரியான வீதத்தில் கொழுப்பு இருந்தால், உங்கள் சருமம் பொலிவுடன் மிளிரும், கூந்தல் அடர்த்தியாக வலுவாக இருக்கும், இதயம் வலுவாக இருக்கும்; சீராக இயங்கும்.

இந்த உலகமே கொழுப்பைக் கண்டு பயந்துகொண்டிருக்க, காலையில் நடைப்பயிற்சி சென்றால்கூட கையில் ஒரு உபகரணத்தைக் கொடுத்து இலவசமாக உங்கள் கொழுப்பை கணித்துக் கூறுகிறோம் என ஒரு கும்பல் துரத்தி மிரட்ட... கொழுப்பு அவசியம் எனக் கூறுகிறீர்களே என்று நீங்கள் வியப்படைவது புரிகிறது. ஆனால், எப்படி பட்டினி டயட் அல்ல; பட்டினியால் உடல் எடை குறையாது என்பதைக் கடந்த அத்தியாயங்கள் மூலம் நீங்கள் உணர்ந்தீர்களோ அதேபோல் ஊட்டச்சத்து நிறைந்த உணவுதான் டயட் என்பதைக் கடந்த இரண்டு அத்தியாயங்களாகத் தெளிவுபடுத்தி வருகிறேன். அதன் நீட்சியாக இந்த வாரம் கொழுப்பின் அவசியத்தை மகத்துவத்தைத் தெரிந்து கொள்வீர்கள்.

x