உங்கள் குழந்தைகள் உங்களோடு நெருக்கமாக...


குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள், எந்த அளவுக்கு விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதில்தான் பெற்றோரின்  வெற்றியே அடங்கியிருக்கிறது. குழந்தைகளிடம் இருந்து அன்பையும் மதிப்பையும் பெறுவது அத்தனை சுலபமான காரியமல்ல. இதற்காக பெற்றோர்கள் மெனக்கெட்டு உழைக்கவும் வேண்டும். அதற்கான சில வழிகளைக் காண்போம்:

குழந்தைகளின் விருப்பங்களை மதியுங்கள்

ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும். உதாரணமாகத்  தங்களுக்கு டிரஸ் எடுக்கச் செல்லும்போது, அவர்கள் குறிப்பிட்ட சில டிரஸ்களைத் தேர்ந்தெடுப்பார்கள். உங்களுக்கு அவை பிடிக்காமல் போகலாம். அல்லது அந்த டிரஸ்கள் மேட்சிங்காக இல்லாமல் இருக்கலாம். அதற்காக பலர் முன்னிலையில் அவர்களைத் திட்டவோ, டிரஸ்ஸைப் பிடுங்கி தூக்கிப் போடவோ கூடாது. மாறாக அவை எந்த வகையில் சிறப்பாக இல்லை என்பதை சொல்லிப் புரியவைக்க வேண்டும். அப்படியும் அதே டிரஸ்ஸைத்தான் வாங்குவேன் என்று அவர்கள் அடம்பிடித்தால் அதற்கான காரணத்தைக் கேளுங்கள். அது அவர்களின் வயதுக்கு ஏற்ற வகையில் ஒப்புக்கொள்ளும்படி இருந்தால் வீண் பிடிவாதம் பிடிக்காமல் அதையே வாங்கிக் கொடுங்கள்.

அதேபோல் ஒரு சில குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்களின் படங்களைத் தங்கள் அறையில் ஒட்டி வைத்திருப்பார்கள். இதுபோன்ற அவர்களின் தேர்வுகளையும் விருப்பங்களையும் முடிந்தவரை மதியுங்கள். அவர்கள் செய்வது சரியில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் பொறுமையாக விளக்கி புரியவையுங்கள். மாறாக, எடுத்ததுமே அவற்றை எதிர்த்தால் வீண்  மனஸ்தாபம்தான் ஏற்படும். இதனால் குழந்தைகளும் உங்களை வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

x