தினகரனிடம் சரண்டர்... சசிகலாவிடம் தூது..!- மீண்டும் மன்னார்குடி வசமாகிறதா அதிமுக?


“ரெய்டு நடவடிக்கைகளில் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து பேசினார்” - டிடிவி தினகரன் புதுக்கோட்டையில் கொட்டிய இந்த ‘வாக்கிங் ரகசியம்’ அதிமுக வட்டாரத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது.

இன்னும் ரகசியங்கள் இருக்கு!

“இதென்ன... இதுபோல இன்னும் பல ரகசியங்களைத் தன் வசம் வைத்திருக்கிறார் தினகரன். ஒரு சில அமைச்சர்கள் பற்றிய எசகுபிசகான விஷயங்கள், வருமான வளைப்புகள் பற்றியெல்லாம்கூட ‘ஸ்லீப்பர் செல்’கள் வழியாக அவருக்குத் தெரியும். சிக்கலில் உள்ள அமைச்சர்களில் பலர் இன்னும் அவரோடு தொடர்பில் இருக்கிறார்கள். வெளிப்படையாக அவர்கள் தன் பக்கம் வரும்போது இதெல்லாம் நெருடலாக இருக்கக்கூடாது என்பதால் மூச்சுவிடாமல் இருக்கிறார். நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தால் தெரியும், தினகரனை விமர்சித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்கள்தான் பேசுகிறார்கள். மற்ற அமைச்சர்கள் யாரும் அவரைப் பற்றி ஒருவார்த்தை கூட பேசுவதில்லை. ஏனென்றால் அவர்களில் பலரும் தினகரனிடம் சத்தமில்லாமல் சரண்டர் ஆகிக் கிடக்கிறார்கள்” என்கிறது தினகரன் முகாம்.

உண்மையான கள நிலவரம்!

x