தமிழுக்குச் சங்கம் கண்ட மதுரைக்கு ரயிலேறி வந்த ’ராஜ் பாஷா’!


‘மைதிலிசரண் குப்த் ஹிந்தி நூலகம்’ இப்படியொரு பெயர்ப்பலகை திடீரென முளைத்திருக்கிறது, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் ரயில் நிலையத்தில்! அதுவும் முதல் பிளாட்ஃபாரத்தில்.

எங்கிருந்து வந்தது இந்த இந்தி நூலகம் என்று ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள் பயணிகள். நாமும் அங்கு சென்றோம். முதல் பிளாட்ஃபாரத்தில், ஸ்டேஷன் மாஸ்டர் அறையைப் போலவே, சுமார் 500 சதுரடி பரப்புகொண்ட மிகப்பெரிய அறையில் உதயமாகியிருக்கிறது அந்த நூலகம். உள்ளே எங்கும் இந்தி, எதிலும் இந்தி. பெயருக்குக்கூட தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட ‘வேற்று’மொழி நூல்களுக்கோ, பத்திரிகைகளுக்கோ இடமில்லை.

இது இந்தித் திணிப்பே!

பெரும் நிறுவனங்களே கடையை வாடகைக்கு எடுக்கத் தயங்கும் அளவுக்கு வாடகை உச்சத்தில் இருக்கும் முதல் பிளாட்ஃபாரத்தில், இவ்வளவு விஸ்தீரணமான இடத்தை எந்தவித லாப நோக்கமுமின்றி ஒரு நூலகத்துக்காக ஒதுக்கியிருப்பது நிச்சயமாக வரவேற்கக் கூடியதுதான். ஆனால், உள்ளூர் மொழி யான தமிழை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, இந்திக்கென ஒரு நூலகம் இவ்வளவு பொருட்செலவில் அமைக்கப்படுவது நியாயமா? ஒரு வேளை இது மத்திய அரசின் இந்தித்திணிப்பின் ஒரு பகுதியாக இருக்குமோ என்ற சந்தேகம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

x