உடன்பிறப்பை வரவேற்க உங்கள் குழந்தையை தயார்படுத்துவது எப்படி?


நீங்கள் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு நிறுத்தத்தில் அந்தப் பேருந்தில் புதிதாக ஏறும் நபர், உங்களிடம் வந்து சற்று நகர்ந்து அமர்ந்து தனக்கு இடம்விடச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நிச்சயம் உடனே நகர மாட்டீர்கள், ஒரு கணம் சிந்திப்பீர்கள் அவரை ஏற இறங்க பார்த்து, இந்தப் பயணத்தில் அருகில் அமர்ந்து செல்ல அவர் ஏற்ற துணைதானா என்று யோசிப்பீர்கள்.

ஒரு பேருந்துப் பயணத்துக்கே இப்படி என்றால் வாழ்க்கைப் பயணத்தில் இதை எப்படி எதிர்கொள்வது? தாய் தந்தையின் மொத்த அன்பையும் பெற்று மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு குழந்தையிடம், இனி எங்களின் அன்பை உன்னுடன் பகிர்ந்துகொள்ள புதிதாக ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்பதை அதன் மனம் புண்படாதபடி எப்படிச் சொல்வது?

திடீரென்று ஒரு தம்பியோ, தங்கையோ பிறந்து தனது பெற்றோரின் அன்புக்கு போட்டியிடுவது எந்தக் குழந்தைக்கும் உடனே பிடிக்காது. எனவே, ஒரு தாய், தான் கருவுற்றிருக்கும் செய்தியை மிகவும் பக்குவமாக தங்கள் மூத்த குழந்தையிடம் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும்போதே அந்தக் குழந்தை
பிறப்பதால் ஏற்கெனவே உள்ள குழந்தைக்கு என்ன பயன், மூத்த அண்ணனாகவோ, அக்காவாகவோ முதல் குழந்தைக்கு உள்ள கடமைகள் என்ன என்பதை விளக்க வேண்டும்.

சிரமங்களைப் புரியவையுங்கள்

x