அஞ்சலிக்கு வந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்யலாமா?


செப்டம்பர் 11 அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட தினம். தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேருக்கும் மேல் உயிரிழந்தனர்.

இதன் 17ம் வருட துக்க அனுசரிப்பில் கலந்துகொண்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த மனைவி மெலானியா ட்ரம்புடன் பென்சில்வேனியா சென்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அங்கு விமானத்தை விட்டு இறங்கியதும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தைப் பார்த்து, ஏதோ சர்வதேச விளையாட்டுப் போட்டியில் ஜெயித்த வீரர்களை உற்சாகப்படுத்துவதுபோல் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு உற்சாகமாய் கத்தினார் ட்ரம்ப்.

அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் இவர் இப்படி ஆர்ப்பாட்டம் செய்தது புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதை நெட்டிசன்கள் மீம் உருவாக்கி விமர்சித்தனர். அந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் இன்னமும் வைரலாகிவருகின்றன.

x