1992-ம் ஆண்டில், மைக்கேல் ஒண்டாஜ்ஜி எழுதிய ‘தி இங்கிலீஷ் பேஷன்ட்’ எனும் போர்க்கால நாவலுக்கு அந்த ஆண்டின் ‘புக்கர் பரிசு’ கிடைத்தது. 1968-ல், ஏற்படுத்தப்பட்டது புக்கர் பரிசு அமைப்பு. இந்த ஆண்டு அந்த அமைப்புக்கு 50 வயது. அதைக் கொண்டாடும் விதமாக, 5 மிக முக்கியமான இலக்கியவாதிகளைக் கொண்டு, கடந்த 50 ஆண்டுகளில் ‘புக்கர் பரிசு’ பெற்ற புத்தகங்களில், மிகச் சிறந்த புத்தகம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தது அந்த அமைப்பு.
அந்தப் புத்தகம், 26 ஆண்டுகளுக்கு முன்பு, புக்கர் பரிசு பெற்ற அதே ‘தி இங்கிலீஷ் பேஷன்ட்’தான். மைக்கேல் ஒண்டாஜ்ஜி இதற்காக சந்தோஷப்பட்டுக்கொள்ளும் வேளையில், அவரது வாசகர்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள். இதற்கு மேலும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, ‘வார்லைட்’ எனும் அவரது புதிய நாவல் சில வாரங்களுக்கு முன்னால் வெளியாகியிருக்கிறது. இரண்டு, அந்தப் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுப் போட்டியிலும் இடம்பிடித்திருக்கிறது.
இப்படி புக்கர் பரிசு ஒரே ஒரு எழுத்தாளரைத் திரும்பத் திரும்பக் கொண்டாடும் வரலாறு இதுவரையில் இருந்ததில்லை. புதிய வரலாற்றைப் படைத்திருக்கும் மைக்கேல் ஒண்டாஜ்ஜிக்கு வரும் 12-ம் தேதி 75 வயது!
‘மனிதர்கள் ரொட்டித் துண்டால் மட்டும் வாழ்வதில்லை. தேவனுடைய வார்த்தைகளாலும் வாழ்கிறார்கள்’ என்கிறது வேதாகமம். மைக்கேல் ஒண்டாஜ்ஜியிடம் கேட்டால், ‘மனிதர்கள் நினைவுகளால் வாழ்கிறார்கள்’ என்பாராக இருக்கும்.
‘நாம் யார்?’