பிடித்தவை 10: கவிஞர் உமா மோகன்


கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், வலைப்பூ (kural-sakthi-blogspot.com) பதிவர் எனப் பன்முகம் கொண்டவர் உமா மோகன்.

புதுச்சேரி அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரியும் இவர், இலக்கிய பிரபலங்களை நேர்முகம் காண்பதில் இனிமை காண்பவர். வெளியில், கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றுக்காக மேடையேறுபவர். ‘டார்வின் படிக்காத குருவி’, ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’, ‘துயரங்களின் பின்வாசல்’, ‘நீங்கள் உங்களைப் போலில்லை’, ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’ என ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். தவிர, ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘வெயில் புராணம்’ என்ற பயணக்கட்டுரைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். வார, மாத, இணைய இதழ்களிலும் எழுதிக்கொண்டிருக்கும்

இவருக்குப் பிடித்த 10 விஷயங்கள் இங்கே:

பிடித்த ஆளுமை: மொழியும் தேசமும், ஆன்மிகமும் முற்போக்கும் என்று இருபக்கமும் இழுத்தாட்டி வைத்த படைப்பாளி பாரதி. அனுசரணை, கம்பீரம், கருணை, தளர்வடையா மனம், உழைப்பு, நாணயத்துடன் எல்லோருக்குமான மனுஷியாக வாழ்ந்த எங்கள் தாய்வழிப்பாட்டி வைரம் ஆத்தா.

x