சைஸ் ஜீரோ 6 - உங்கள் சாப்பாட்டில் ஊட்டச்சத்து இருக்கிறதா?!


ருஜுதா திவேகர்

நம்மில் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்கப்பெறுபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில், பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சிக் கழகம் உலக அளவில் 119 வளர்ந்து வரும் நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்தியா 100-வது இடத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, நம்மில் பலரும் மூன்று வேளை தவறாமல் உண்கிறோம். வாய்ப்பும் வசதியும் இருப்போர் விதவிதமாக உண்கின்றனர். ஆனால், அந்த உணவில் ஊட்டச்சத்து இருக்கிறதா என்பதை நாம் உறுதி செய்திருக்கிறோமா?!

எப்படிச் சாப்பிட்டால் நாம் நம் வயிற்றுக்கு நீதி செய்ய முடியும் என்பதைக் கடந்த அத்தியாயத்தில் தெரிந்து கொண்டோம் அல்லவா? அடுத்து, எதைச் சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம். எதைச் சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

x