ஒரு தவறு செய்தால்.. அதை தெரிந்து செய்தால்...!


பி.எம்.சுதிர்

தவறு செய்வது மனிதர்களுக்கு இயல்பான விஷயம். அதிலும் குழந்தைகள் தவறு செய்வது சர்வ சாதாரணமாய் நடக்கக்கூடிய விஷயம். குழந்தை தவறு செய்துவிட்டது என்பதாலேயே அது ஒரு மோசமான குழந்தை என்ற முடிவுக்கு பெற்றோர்கள் வந்துவிடக் கூடாது. மாறாக, அந்தத் தவற்றில் இருந்து குழந்தைகளைத் திருத்துவது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

தவறுகள்தான் குழந்தைகளுக்கு நல்லதொரு ஆசான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பெரும்பாலான குழந்தைகளுக்கு தவறுகள்தான் நல்ல படிப்பினையைக் கொடுக்கும். அவற்றில் இருந்துதான் அவர்கள் பாடம் கற்றுக் கொள்கிறார்கள். தவறே செய்யாத மனிதன் என்பவன் முயற்சி ஏதும் செய்யாதவனாக இருப்பான் என்பது பெரியோர் வாக்கு. எனவே, உங்கள் குழந்தைகள் தவறு செய்தால் அதைப் பெரிதுபடுத்தாதீர்கள். அவை உங்கள் குழந்தைகளைப் பண்படுத்த வந்தவை என்ற எண்ணத்துடன் அணுகுங்கள்.

அவர்களாகவே பேசும்வரை காத்திருங்கள்

x