சைஸ் ஜீரோ 5: வயிற்றுக்கு நீதி செய்வோம்; வளமாக வாழ்வோம்!


பசி என்றோர் உணர்வு மட்டும் மனிதனுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்த உலகம் எப்படி இயங்கும் என்று உங்களால் யூகித்துப் பார்க்க முடிகிறதா? எனவே, நம் எல்லா லட்சியங்களும் எல்லா கனவுகளும் நனவாக நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; அதற்கு உணவு முக்கியம்.

நாம் உண்ணும் உணவை உடலுக்கான ஊட்டச்சத்தாக மாற்றும் உள் உறுப்புதான் வயிறு. அந்த வயிற்றுக்கு ஏற்றார்போல் எப்படி உண்ண வேண்டும் என நாம் தெரிந்து கொள்வது வயிற்றுக்கு நாம் செய்யும் நீதி. இந்த வாரம், வயிற்றுக்கு நீதி செய்வது எப்படி என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

அப்படிப்பட்ட முதலாளியை எப்படிப் பிடிக்கும்?

ஆங்கிலத்தில் ‘Stomach an insult' என்றொரு தொடர்மொழி இருக்கிறது. கண்டகண்ட நேரத்தில் கண்டதையும் உண்பதைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள். பகுத்தறிவு இல்லாமல் உண்ணுதல் வயிற்றுக்கு செய்யும் அவமரியாதை என்பதையே இப்படி விளக்குகிறார்கள்.

x