கற்றதும்... காத்ததும்..!


மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் 17 உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் பத்து வயது சிறுமி ஸென் சதாவர்தே.

அந்தக் கட்டிடத்தில் தன் பெற்றோருடன் வசிக்கிறாள் ஆறாம் வகுப்பு படிக்கும் இச்சிறுமி. கடந்த புதன் அன்று இந்தக் கட்டிடத்தில் திடீரெனப் பற்றிய தீ மளமளவென அதிகரித்து சில மாடிகளுக்குப் பரவியது. அப்போது தன் சமயோசித புத்தியால் எல்லோருக்கும் உதவியிருக்கிறாள் சிறுமி ஸென். தீ விபத்து ஏற்படும்போது, பதற்றப்படாமல் ஈரத் துணியை உடலில் சுற்றிக்கொண்டு முகத்திலும் ஈரத்துணியை ஒற்றிக்கொண்டால் தப்பிக்கலாம் எனப் பள்ளியில் கற்றுக்கொண்டதை அனைவருக்கும் எடுத்துச் சொல்லியிருக்கிறாள். “ஸென் சொன்னபடி நடந்ததால்தான் தீ விபத்திலிருந்து உயிர் பிழைத்தோம்” என்று வியக்கின்றனர் விபத்தில் தப்பியவர்கள். சிறுமியான நம்மால் என்ன செய்துவிட முடியும் என்று பயந்து ஓடாமல் தைரியமாகக் களத்தில் நின்று 17 உயிர்களைக் காலனிடமிருந்து காத்த ஸென் சதாவர்தேவுக்கு ஒரு சல்யூட் வைப்போம். 

x