பிடித்தவை 10 - கவிஞர் தனலெட்சுமி


புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர் கவிஞர் தனலெட்சுமி. மத்திய சுகாதாரத்துறையில் பணிபுரியும் இவர் ‘அம்மா உன் உலகம்’, ‘பறையொலி’ என இரு நவீனக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இசையும், இலக்கியமும் தன்னை உயிர்ப்போடு இயங்கவைப்பவை எனச் சிலாகிப்பவர்.

பல்சுவை நிகழ்ச்சிகள், சிறுகதை வாசிப்பு, கவியரங்கங்கள் என வானொலியில் தொடர் பங்களிப்பு செய்துவரும் இவர், தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார். திருச்சி நகைச்சுவை மன்றம், சுற்றுச்சூழல் அமைப்புகள், வாசகர்வட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் இணைந்து செயல்பட்டுவரும் தனலெட்சுமியின் பிடித்தவை பத்து இங்கே…

பிடித்த ஆளுமை: பெண்களின் கல்விக்காக களமாடி நோபல் பரிசு பெற்ற மலாலா, மாணவர்களுக்கு நல்வழிகாட்டிய விஞ்ஞானி அப்துல்கலாம் ஆகியோர்.
பிடித்த கதை: எளிமையான உரைநடை பாணியைக் கையாளும் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதைகள் பிடிக்கும். வாஸந்தி, சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளும் இஷ்டம். புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம் படைப்புகள் மீது ப்ரியமுண்டு.

பிடித்த இடம்: அறிவுக்கண்ணை திறந்து, ஆர்வத்தை பூர்த்தி செய்து, பேரண்டத்தையே உணரவைக்கும் நூல் நிலையங்கள்.

x