ஆட்சின்னு ஏதோ ஒண்ணு நடக்குது... அதை தக்கவெச்சுக்க என்னென்னமோ செய்யுறாங்க..!- நடராஜனின் அண்ணன் நச் பேட்டி!


தஞ்சையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது மரங்கள் சூழ் விளார் கிராமம். அங்குள்ள தனது மருதப்பா இல்லத்தின் வராந்தாவில் டீப்பாய் மீது கால்களை நீட்டியபடி நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் விளார் சாமிநாதன். மறைந்த ம.நடராஜனின் மூத்த அண்ணன். தன்னைப் பற்றி எந்த விளம்பர வெளிச்சமும் போட்டுக்கொள்ளாத சாமிநாதன் நடராஜன் குடும்பத்தின் தலைவர்.

மீடியாக்களுக்கு தீனி கொடுக்காமல் விலகியே இருக்கும் சாமிநாதனை ‘காமதேனு’வுக்காக சந்திக்கப் போயிருந்தேன். “நான் என்ன அரசியல்வாதியா... என்னை எதுக்குத் தேடி வந்தீங்க...?” என்று கிராமத்துப் பெரியவர் கணக்காய் கேட்டார். அவரை மெது மெதுவாகச் சமாதானப் படுத்திப் பேச வைத்தேன். முதலில் மறுத்தவர் பிறகு, தனது தம்பியிலிருந்தே பேச்சைத் தொடங்கினார்.

“அரசியல்ல உச்சம் தொட்டவர் என் தம்பி நடராஜன். அதிமுகவையும், ஜெயலலிதாவையும் காப்பாற்ற பல தியாகங்களைச் செய்தவர். அந்த விசுவாசத்தில் கடைசிவரை கடுகளவும் குறையாமல் இருந்தார். ஆட்சி அல்லாடும் போதும் சரி, கட்சியில் சலசலப்பு கிளம்பும் போதும் சரி... அத்தனையும் சரிசெய்து, பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து... செய்ய வேண்டியவைகளைச் செய்து எல்லாத்தையும் நிலைநிறுத்தினார். எத்தனையோ எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள், மந்திரிகள் அவரால் உருவாக்கப்பட்டார்கள். கடைசிவரை ஜெயலலிதாவுக்கு நன்றி விசுவாசத்தோடு செயல்பட்டார். ஆனால், அதற்கான அங்கீகாரத்தை அவருக்குக் கொடுத்தார்கள் என்று நினைக்கிறீர்களா..? இல்லை. என் தம்பிக்கான சுதந்திரம் அங்கு இல்லை.

கட்சிக்காக பாடுபட்டவர் குடும்பத்தில் எப்படி இருந்தார்?

x