சைஸ் ஜீரோ 3


உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதே ஒரு கலைதான். சிற்பத்தைப் பார்த்துப் பார்த்துச் செதுக்குவது போல்தான் வடிவான உடலைப் பெறுவதற்கான பிரயத்தனமும் இருக்க வேண்டும். வடிவான உடலைச் சாத்தியமாக்க ஆரோக்கியமான உணவுடன் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ற பயிற்சியையும் கடைப்பிடித்தல் அவசியம்.

ஆனால், டயட் என்பதை எப்படி பட்டினி கிடத்தல் என நம்மில் பெரும்பாலானோர் தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றனரோ அப்படித்தான் உடற்பயிற்சி என்பதையும் தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றனர் நம் மக்கள். ஓடுவதும், நடப்பதும், மெல்லோட்டம் செல்வதும், நீந்துவதும், சைக்கிளிங் செல்வதும், ஸ்கிப்பிங் செய்வதும் இன்னும் பிற உடற்கல்விக் கூட பயிற்சிகளை மேற்கொள்வதும்தான் உண்மையான உடற்பயிற்சி.

இதைவிடுத்து, கொழுப்பைக் குறைக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதும், ஊசி போட்டு கொழுப்பைக் கரைப் பதும், அறுவை சிகிச்சை மூலம் தேவையற்ற கொழுப்பை அகற்றுவ தும்கூட உடற்பயிற்சிகள்தான் எனச் சிலர் தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றனர். 

உணவையும் கட்டுப்படுத்த முடியாது; உடலை வருத்திப் பயிற்சிகளும் செய்ய முடியாது. ஆனால், உடல் எடை மட்டும் குறைய வேண்டும் என்று நினைக்கும் குறுக்கு வழி பிரியர்கள்தான் இத்தகைய போலி பயிற்சிகளுக்கு பலியாடு ஆகிறார்கள்.

x