பிடித்தவை 10- கவிஞர் ஜெ.நிஷாந்தினி


இலக்கியச் சிற்றிதழ்களில் ஏராளமான கவிதைகளை எழுதிக் குவிப்பவர் ஜெ.நிஷாந்தினி. ‘ஆரஞ்சு வண்ணங்களாக நீளும் பாதை’, ‘விநோத பறவையின் கடற்கரை’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர். தூத்துக்குடி மாவட்டத்தில் இடைச்சிவிளை கிராமத்தில் பிறந்த இவர், இப்போது கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 2016-17 ஆம் ஆண்டுக்கான தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது பெற்றுள்ளார். இலக்கியக் கூட்டங்கள், கல்லூரி நிகழ்வுகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதிலும் அசத்தும் ‘நிஷாந்தினி’ தனக்குப் பிடித்தவை பத்து பகிர்ந்துகொள்கிறார் இங்கே…

ஆளுமை: அப்துல் கலாம். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, ஆசிரியர், கவிஞர், இசை ஆர்வலர், அற்புதமான பேச்சாளர், இளைஞர்களின் முன்மாதிரி என்று பன்முகத் தன்மையுடையவர். குடியரசுத்தலைவராக இருந்து தமிழ் குடியின் பெருமையை உலகமெங்கும் பரப்பிய கலாமை நினைக்கையிலேயே தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்.

கதை: உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’, சுஜாதாவின் ‘நகரம்’, கி. ராஜநாராயணனின் ‘கதவு’, சந்திராவின் ‘பூனைகள் இல்லாத வீடு’

x