கல்வியின் அருமை உணர்ந்த கார்த்தியாயினி!


கேரளாவைச் சேர்ந்த கார்த்தியாயினி 4-ம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார். இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா...

கார்த்தியாயினியின் வயது இப்போது 96! கேரளத்தில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் முதியோர் கல்வி திட்டத்தில் படித்து இந்தச் சிகரத்தைத் தொட்டிருக்கிறார் இந்த மூதாட்டி. குடும்பச் சூழலால் பள்ளியை விட்டு இடைநின்ற கார்த்தியாயினி பால்ய விவாகம் என்ற பாதகத்தில் தள்ளப்பட்டார். 28 வயதில் கணவரை இழந்த இவருக்கு ஆறு குழந்தைகள்.

பிள்ளைகளை ஆளாக்க வீட்டு வேலைகளுக்குப் போய் கஷ்டப்பட்ட கார்த்தியாயினி, “நான் படித்திருந்தால் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்” என்கிறார். படிப்பின் அருமையைப் பல நேரங்களில் உணர்ந்த இவர், தனது 92 வயதில் முதியோர் கல்வித்திட்டத்தில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். வயதில் செஞ்சுரி அடிப்பதற்குள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் பாஸாகி விடவேண்டும் என்பது இந்த 96 வயது மாணவியின் லட்சியக் கனவு!

x