கடைசி மூச்சுவரை கட்சிப் பணியில்..!- மனம் திறக்கும் மார்க்சிஸ்ட் தோழர் ஜான்சிராணி


பலருக்கும் வாழ்க்கையே போராட்டமாக அமைந்துவிடுவதுண்டு. ஆனால், போராட்டக் களத்தையே வலியச்சென்று தனக்கான வாழ்க்கையாக பற்றிக்கொண்டவர் தோழர் ஜான்சிராணி. விபத்தொன்றில் இடதுகால் துண்டிக்கப்பட்டு செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது. வலதுகாலிலும் தகடுகள் பொருத்தப்பட்டு வலி கால்களை நெறிக்கச் செய்கிறது... கூடவே, சர்க்கரை நோயும் சேர்ந்து கொண்டதால்... ரத்தம் கசிந்து செயற்கைக்கால்களில் கால்களை பொருத்த முடியாமல் அவதியுறுகிறார். 

ஆனால், இந்த வலிகளெல்லாம் ஒருபோதும் அவரைக் களைப்புறச் செய்வதில்லை. காலையில் ஒரு போராட்டம், மாலையில் ஒரு பொதுக்கூட்டம் என்று இவரது கால்கள் தமிழகம் முழுவதும் ஒடுக்ககப்பட்ட மக்களுக்காக ஓடிக்கொண்டேயிருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு நிர்வாகி, அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் துணைத் தலைவர், மகளிர் சட்ட உதவி மன்றத்தின் மாநில நிர்வாகி, மாதர் சங்கப் புரவலர் இத்துடன் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் அன்பு மனைவி இந்த ஜான்சிராணி! 

தனக்குள் இத்தனை உபாதைகள் இருந்தாலும் தன்னைப்பற்றிக் கவலைப்படாமல் மற்றவர்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் களப் போராளி, காமதேனுக்காக பேசவேண்டும் என்று சொன்னபோது “நாளைக்கே வந்துவிடுங்கள்...” என்று சொல்லவில்லை. இவருக்காக கிட்டத்தட்ட ஒருமாத காலம் காத்திருந்துதான் இந்தப் பேட்டியை எடுக்க முடிந்தது. காத்திருக்க வேண்டியதன் காரணம் அவருடைய அயராத மக்கள் பணி. அந்தக் காத்திருப்பும் அர்த்தமுள்ளதே என்பதை அவரது பேட்டியின் முடிவில் நானும் உணர்ந்துகொண்டேன். இனி அவரது பேட்டி...

x