முகம்மது ரஃபிக்கு மரியாதை- மலைக்க வைக்கும் ஒரு மலையாளக் குடும்பம்!


இறுதி மூச்சு இருந்த வரையிலும் பாலிவுட் திரை உலகை தனது குரலால் வசியப்படுத்தி வைத்திருந்தவர் பாடகர் முகம்மது ரஃபி. இவரது குரலுக்கு மயங்காதவர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு அளவுக்கு வசீகர குரலுக்கு சொந்தக்காரர். ரஃபிக்கு கேரளத்திலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதில், ஆலப்புழா ‘குஞ்யு சூப்பி’யின் குடும்பம் வேற லெவல்!

இந்தி பாடகராக முகம்மது ரஃபி அடையாளப் படுத்தப்பட்டாலும் கொங்கணி, போச்புரி, அசாமிய மொழி, ஒடியா, பஞ்சாபி, கன்னடம், குஜராத்தி, தெழுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பாடியுள்ளார். ஆனால், மலையாளத்தில் முகம்மது ரஃபி ஒரு பாட்டுக்கூட பாடியதில்லை. ஆனாலும் அவரது இனிமையான குரல் மலையாளிகளையும் மயக்கிப் போட்டிருந்தது. அதன் தாக்கம்தான், இந்தி மொழியே தெரியாத குஞ்யு சூப்பியை இன்னமும் முகம்மது ரஃபியின் புகழ் பாட வைத்துக் கொண்டிருக்கிறது.

ஆலப்புழாவில் உள்ள குஞ்யுசூப்பி வீட்டுக்கு நாம் சென்ற போதும் முகம்மது ரஃபியின் இந்திப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாற்காலியில் இருந்த வாறு, தொடையில் தட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார் குஞ்யுசூப்பி. ரஃபிக்காக இவர் அப்படி என்ன செய்து விட்டார்? அதை அவரே குஞ்யு சூப்பி பேசுகிறார். “ஆலப்புழாவுல, கல்லுப்பாலம் பகுதிதான் எனக்கு பூர்வீகம். பத்தாம்கிளாஸ் வரை படிச்சுருக்கேன்.

அதுக்கு அப்புறம் சுமைதூக்கும் வேலைக்கு போயிட்டேன். அப்போல்லாம் இப்போ இருக்குற மாதிரி வீட்டுக்கு, வீடு டிவியெல்லாம் கிடையாது. ரேடியோதான் ஒரே பொழுதுபோக்கு. சுமைதூக்கும் பணி என்பதால் எனக்கு ராப்பகலா வேலை இருக்கும். அப்போதெல்லாம் ரேடியோ தான் எனக்கு சினேகிதன். அப்போதெல்லாம், இலங்கை வானொலியில் நல்ல, நல்ல இந்திப் பாடல்களைப் போடுவாங்க. அதை கேட்டு, கேட்டே முகம்மது ரஃபி ரசிகராகிட்டேன்.

x