சைஸ் ஜீரோ 2- பட்டினியும் வேண்டாம் பத்தியமும் வேண்டாம்


எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல உடல் எடையைக் குறைப்பதற்காக டயட் மேற்கொள்பவர்கள் கற்றாழைச் சார்றில் இருந்து வேப்பிலை ரசம்வரை எதைக் கொடுத்தாலும் சாப்பிடத் தயாராகவே இருக்கிறார்கள். உடல் எடைக் குறைப்பு சிகிச்சை நிபுணர்களும் இதற்கு ஒரு பெயரும்கூட வைத்திருக்கிறார்கள்.

அதுதான் ‘டீடாக்ஸ் டயட் (DETOX DIET)’. இத்தகைய ‘டீடாக்ஸ் டயட்’ முறை என்பது பின்பற்றுவதற்கு மிகக் கடினமானது. அதைவிட மிக முக்கியமான விஷயம் இந்த டயட்டுகள் உங்களை நிச்சயமாக மனதளவிலும் உடலளவிலும் சோர்வடையச் செய்துவிடும் என்பதுதான்!

டீடாக்ஸ் என்றால் நச்சுகளை நீக்குதல் என்று அர்த்தம். நீங்கள் ‘டீடாக்ஸ் டயட்’ மேற்கொள்கிறீர்கள் என்றால் உங்களுடைய இத்தனை ஆண்டு வாழ்க்கையிலும் நீங்கள் சாப்பிட்டது அத்தனையும் நச்சு... நச்சு... வெறும் நச்சு என்று நீங்களே தற்சான்றிதழ் கொடுத்ததாகத்தானே அமையும்? பருமனான தேகம் இருப்பதால் அதற்குத் தண்டனையாக ஏதேதோ காய்கறி சாற்றைக்கூட நீங்கள் குடிப்பீர்கள். பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், பீட்ரூட் போன்ற காய்கறிகளின் சாற்றை நினைத்துப் பார்க்கவே முடியாதபோது நீங்கள் அதை அசாதாரணமாக உள்ளே தள்ளிக்கொண்டிருப்பீர்கள்.

10 நாளில் 7 கிலோ எடை குறைக்க முடியுமா?

x