அன்பினால் சூழ்ந்தது எங்கள் உலகு...- சேவைக்காக வேலையைத் துறந்த தம்பதி!


வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் இந்தக் காலத்தில், இருந்த வேலையை விட்டுவிட்டு தங்களின் சொந்த ஊருக்கு வந்து சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் ஒரு தம்பதியர்!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவிக்குப் பக்கமாய் உள்ளது கோடகநல்லூர். இதுதான் சித்ரா - வாசு தேவன் தம்பதியர் இப்போது தத்தெடுத்திருக்கும் கிராமம். 

சித்ராவின் தாத்தா ரங்காச்சாரிக்கு பூர்வீகம் இந்த ஊர். இங்கே மருத்துவராகப் பணி செய்தவர் ரங்காச்சாரி. சித்ரா - வாசுதேவன் தம்பதியும் இப்போது இங்குதான் சொந்தமாக வீடுகட்டி வசிக்கிறார்கள். 

எம்.பி.ஏ., பட்டதாரியான சித்ரா, டெல்லியில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணி செய்தார். பொறியாளரான வாசுதேவன் டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்தார். விடுமுறை நாட்களில் சொந்த ஊர் பக்கம் வந்து போகும் இவர்கள், அந்தச் சமயங்களில் கிராமத்துப் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் மற்றும் ஆளுமைப் பயிற்சிகளைத் தருவது வழக்கம். இவர்களின் இந்தச் சேவைக்கு கிராம மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்புகள் குவிந்ததால், 2012-ல் இருவருமே வேலையைத் துறந்துவிட்டு சொந்த ஊருக்கே வந்து முழுநேர சேவகர்களாகிப் போனார்கள்.

x