பிடித்தவை 10 - கவிஞர் மு.கீதா


அரியலூரில் பிறந்து, தற்போது புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுபவர் மு.கீதா. 

‘விழி தூவிய விதைகள்’, ‘ஒரு கோப்பை மனிதம்’, ‘மனம் சுடும் தோட்டாக்கள்’ ஆகிய மூன்று கவிதை நூல்களோடு, ‘வேலுநாச்சியார் நாவலில் பெண்ணியச் சிந்தனை’ என்ற ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார். இலக்கிய மற்றும் சமூகப் பணிகளில் ஆர்வமுடைய இவர், ‘வீதி’ கலை இலக்கிய அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளர். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர், தமிழக அரசின் 6-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத் தயாரிப்புக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். இனி, இவருக்குப் பிடித்தவை பத்து...

ஆளுமை: சிவகங்கை ராணி வீரமங்கை வேலு நாச்சியாரின் ஆளுமையும், தந்தை பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகளும் என்னை வடிவமைத்தன.
கதை: கலீல் ஜிப்ரானின் ‘முறிந்த சிறகுகள்’, மக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’, லா.ச.ராவின் ‘அபிதா’, தி.ஜா.வின் ‘அம்மா வந்தாள்.’

கவிதை: மாயோ ஏஞ்சலோவின் கவிதைகள், அப்துல் ரகுமான், கண்ணதாசன், இன்குலாப், கல்யாண்ஜி ஆகியோரின் கவிதைகளோடு, ஜென் கவிதைகளும்.
தலம்: கொடைக்கானலில் உள்ள ‘பேரிஜம் வனப்பகுதி’, ஆக்ராவிலுள்ள அமைதி தவழும் ‘தாஜ்மகால்.’

x