அரேபிய ரோஜா 22: ராஜேஷ் குமார்


அப்சலும் ஹயாத்தும் ஸ்தம்பித்துப்போனவர்களாய் சர்புதீனையே பார்க்க, அவன்அதே கிசுகிசுப்பான குரலில் பேசினான்.
‘‘ரெண்டு பேரும் வலது புறமாய்த் திரும்பி இந்த அறையின் மூலையில் இருக்கிற வார்ட் ட்ரோப் கதவைப் பாருங்க!’’

இருவரும் ஸ்லோமோஷனில் திகிலடித்த பார்வையோடு தலைகளைத் திருப்ப, அந்தப் பளபளப்பான வார்ட் ட்ரோப் கதவைத் திறந்துகொண்டு மஹிமா வெளிப்பட்டாள். முகத்தில் எந்தவிதமான சலனத்தையும் காட்டாமல் மெல்ல நடந்துவந்து சர்புதீனுக்கு அருகே அமர்ந்தாள்.

அவளைப் பார்த்துப் புன்னகையோடு கேட்டான் சர்புதீன்.

‘‘ஸாரி மஹிமா. வார்ட் ட்ரோபுக்குள்ளே உங்களை ரொம்ப நேரம் நிக்க வெச்சுட்டேன்.’’
மஹிமாவின் உதட்டிலும் ஒரு புன்முறுவல் பூத்தது.
‘‘நோ பிராப்ளம். ஐயாம் ஆல்ரைட். ஏசி இல்லாமல் கொஞ்சம் சிரமமாய் இருந்தது.’’
‘‘இப்ப பவருக்கு உயிர் கொடுத்துடுவோம்.’’
சொன்ன சர்புதீன் தன் கையில் கட்டியிருந்த மொபைல் செல்போன் வாட்ச்சைக்கழற்றி அதில் இருந்த ஒரு பட்டனை அழுத்த, அறையில் இருந்த எல்.இ.டி.விளக்குகள் உயிர்ப்பித்து அறையை வெளிச்சத்தில் நிரப்பின.
ஹயாத் கோபத்தோடு எழுந்தான்.
‘‘சர்புதீன்... இங்கே என்ன நடக்குது?’’
‘‘எது நடக்கணுமோ அது நடந்துட்டு இருக்கு.’’
‘‘துரோகி’’ என்று பெரிதாய்க் கத்திக்கொண்டே சர்புதீன் மேல் பாய முயன்ற விநாடி, சர்புதீனின் இடது கையில் இருந்த இன்விசிபிள் லேசர் பிஸ்டல் மைக்ரோ விநாடிநேரத்துக்குள் உயர்ந்து குறி பார்த்துவிட்டுத் தாழ்ந்தது.
ஹயாத் அப்படியே சத்தம் இல்லாமல் இரண்டாய் மடங்கி உட்கார்ந்து சிறிது சிறிதாய் மல்லாந்தான். தலையிலும் மார்பிலும் ரத்தப் பொத்தல்கள் உருவாகி பத்தே விநாடிகளில் உயிரை விட்டுவிட்டு ஒரே திசையை வெறித்துப் பார்த்தான்.
அப்சல் அதிர்ந்துபோனவனாய் ஹயாத்தைப் பார்த்துக்கொண்டிருக்க, சர்புதீன் சிரித்தான்.
‘‘அப்சல்... மஹிமாவைத் தேடி நாம அஞ்சு பேரும் போனபோது நிஷாவும் கெளசிக்கும் எப்படி இறந்தாங்க என்கிற கேள்விக்கு இப்ப உனக்கு பதில் கிடைச்சிருக்கும். அது இந்த ஐ.வி.எல்.பி-யோட உபயந்தான். சைலன்ட், இன்விசிபிள், டெட்லி வெப்பன். இது நியூ மெக்சிகோவில் பிறந்து ஆறு மாசம்தான் ஆச்சி.’’
அப்சல் சர்புதீனைப் பார்த்து கோபமாய்க் கத்தினான்.
‘‘உனக்கு நான் என்ன குறை வெச்சேன்? அல் அராபத் கம்பெனியில் ஒரு சாதாரண
ரிஸர்ச் ஸ்காலராய் இருந்த உன்னை என்னோட ஒரு கம்பெனிக்கு சைலன்ட் பார்ட்னரா போட்டேன். உனக்கு எல்லா அதிகாரங்களும் கொடுத்து என்னோட தம்பி ஹயாத்தை விட ஒரு படி மேலே வெச்சிருந்தேன். ஆனா, நீ உன்னோட புத்திய காட்டிட்டே.’’
‘‘எஸ். யூ ஆர் கரைக்ட் அப்சல். நான் என்னோட புத்திய காட்டிட்டேன். நீ நினைச்சுட்டு இருக்கிற மாதிரி நான் அல் அராபத் கம்பெனியில் வேலை பார்க்கும் ரிஸர்ச் ஸ்காலர் கிடையாது. துபாய் இன்டலிஜென்ஸ் லிங்கின் ஒரு அங்கமான ஹெட் ஹன்ட்டிங்ஏஜென்சியில்( Head Hunting Agency) பணிபுரியும் ரெட் ஹேண்ட் ஆபீஸர். துபாய் போலீஸும் சட்டமும் உன்னுடைய கொட்டிக்கிடக்கும் பணத்துக்கு முன்னால் வாலை ஆட்டலாம். ஆனா, துபாயின் இன்னொரு முகமான துபாய் ஸ்பை ஏஜென்சீஸ்அப்படிக் கிடையாது. மற்ற நாடுகளில் இருக்கிற ஐடி கம்பெனிகளில் அரிதான ப்ராஜெக்ட்டுகள் உருவாகும்போது அதைக் கண்காணிச்சிட்டு, அந்த ப்ராஜெக்ட்
டுகள் நிறைவான நிலையை அடையும்போது அந்த ப்ராஜெக்ட்டைத் தட்டிப்பறிக்கிற உன்னோட அறிவுத்திருட்டு வேலையை முதன்முதலில் கண்டுபிடிச்சது இந்த துபாய்
ஸ்பை ஏஜென்சிதான். எத்தனையோ அரிதான ப்ராஜெக்ட்டுகளைத் திருடிக்
கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த உன்னோட பார்வை மஹிமா உருவாக்கிய அரேபிய ரோஜா மீதும் பட்டது. அரேபிய ரோஜாவை அடையறதுக்காகக் காய்களை
நகர்த்த ஆரம்பிச்சே. கெளசிக்கும் நிஷாவும் உனக்கு விசுவாசமாய் மாறினாங்க.’’
அப்சல் வியர்த்த முகத்தோடு உன்னிப்பாய்க் கேட்டுக்கொண்டிருக்க, சர்புதீன் சிலவிநாடிகள் இடைவெளி விட்டுத் தொடர்ந்தான்.
‘‘இதை மொதல்ல மோப்பம் பிடிச்சவர் துபாய் ஸ்பை ஏஜென்சியில் ஹெட் சென்டராய் பணியாற்றும் தாஹீர் சையத். போலீஸும் சட்டமும் உனக்கு சாதகமாய் இருந்ததால உன்னை மடக்கிப் பிடிக்க நாங்க ஒரு திட்டம் போட்டோம். இந்தத் திட்டத்தோட மூளையாய் இருந்து செயல்பட்டவர் அல் அராபத் கம்பெனியின் சீஃப் எக்சிகியூட்டிவ் டைரக்டர் ஷேக் மெளலானா. அவர்தான் என்னைத் தன்னுடைய
கம்பெனியில் ஒருரிஸர்ச் ஸ்காலராய் நியமனம்
பண்ணி  வேவுபார்க்கும் பொறுப்பைக் கொடுத்
தார். அரேபிய ரோஜா ப்ராஜெக்ட் சம்பந்தமாய் மஹிமாவோட பேச வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். எனக்கு உதவியாய் இம்ராவும் களத்தில் இருந்தாள். இந்த நிலைமையில்தான் நானும் ஷேக் மெளலானாவும் எதிர்பார்த்தபடி ஹயாத்தும் நீயும் எனக்குத் தூண்டில் போட்டீங்க. மஹிமாகிட்ட இருக்கிற அரேபிய ரோஜா ப்ராஜெக்ட்டின் தொழில்நுட்பம் உங்க கைக்கு வர என்கிட்டே பேரம் பேசுனீங்க. நாங்க எதிர்பார்த்ததும் இதைத்தானே? உனக்கும் உன்னோட தம்பி ஹயாத்துக்கும் நம்பிக்கை வர்ற மாதிரி நடிச்சேன். அந்த நடிப்புக்குக் கிடைச்ச வெற்றிதான் இந்த விநாடிகள்.’’
அப்சல் கோபத்துடன் எழ முயன்றான். சர்புதீனின் கையில் இருந்த ஐவிஎல்பிபிஸ்டல் அவனைக் குறி பார்த்தது.
‘‘வேண்டாம் அப்சல். நான் அராபத் கம்பெனி
யின் உண்மையான ஊழியன் கிடையாது. துபாய் இன்டலிஜென்ஸ்சின் ஹெட் ஹன்ட்டிங் பிரிவில் வேலை பார்க்கும் ரெட்ஹேண்ட் ஆபீஸர்.
என்னைத் தாக்க யார் முயற்சி பண்ணினாலும் அவங்களைச் சுட்டுத்தள்ள எனக்கு அதிகாரம் இருக்கு. உன்னோட தம்பியை நான் சுட்டதுக்குக்
காரணம் அவன் என்னைத் தாக்க முயற்சி பண்ணினதுதான். நீ என்னைத் தாக்கமுயற்சி பண்ணினாலும் அதே விநாடி உனக்கு மரணம்.’’
அப்சல் அப்படியே தளர்ந்துபோய் உட்கார்ந்
திருக்க, அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் அமைதிகாத்த மஹிமா சர்புதீனை ஏறிட்டாள்.
‘‘மிஸ்டர் சர்புதீன்... நீங்க பண்ணின இந்த டைம்லி ஹெல்ப்பை என்னோட வாழ்நாளில் என்னிக்குமே மறக்க முடியாது. இனிமேல் இந்த இடத்திலிருந்து தப்பிக்கவே முடியாதுன்னு நான் என்னோட நம்பிக்கையை எல்லாம் இழந்து
கலங்கி நின்னபோது ஒரு ரட்சகன் மாதிரி வந்து என்னைக் காப்பாத்தியிருக்கீங்க. இருந்தாலும் என்னோட மனசுக்குள்ளே ஒரு நெருடல்.’’
‘‘என்ன..?’’
‘‘அந்த இம்ராவையும் அவளோட தோழி ஹம்தாவையும் கொடூரமாய்த் தாக்கி அவங்க உயிரிழப்புக்குக் காரணமாய் நீங்க இருந்திருக்க வேண்டாம்.’’
சர்புதீன், மஹிமாவை ஒரு புன்முறுவலோடு பார்த்தான்.
‘‘ஒரு விஷயம் உங்களுக்குப் புரியலை
மஹிமா. அந்த இம்ராவும் ஹம்தாவும் உண்மை
யிலே யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?’’
‘‘யாரு?’’
‘‘ரெண்டு களைகள்.’’
‘‘புரியலை.’’
‘‘We Hate Dubai அமைப்பைச் சேர்ந்த லேடி டெர்ரரிஸ்ட்தான் அந்த இம்ராவும் ஹம்தாவும். உண்மையில் அந்த ரெண்டு பேரின் மரணத்துக்கு நான் காரணமில்லை. இம்ராவை நான் மடக்கியபோது என்னைத் தாக்க முயற்சி பண்ணி தோற்றபோது தன்னோட கழுத்தைத் தானே அறுத்துக்கிட்டு ஒரு சில விநாடிகளுக்குள் இறந்துட்டா. காரணம் அவ கையில் இருந்தது சயனைட் விஷம் தடவப்பட்ட பாய்சண்ட் ஸ்பைரல் நைஃப். அதே மாதிரி அப்சல் வீட்டுக்கு வேன் போயிட்டிருந்தப்போ ஹம்தாவும் பாய்ஸண்ட் நைஃப்ல என்னைத் தாக்க முயற்சி பண்ணினா. நான் அவளைத் தூக்கிஎறிஞ்சேன். கீழே விழுந்தவள் இனி எழுந்து என்னைத் தாக்க முடியாது என்கிற நிலைமையில் அவளும் கழுத்தை அறுத்துகிட்டு இறந்துட்டா. மிரண்டுபோயிருந்த நீங்க அதையெல்லாம் கவனிக்கலை. வேனை ஓட்டிக்கிட்டு இருந்த ட்ரைவர் வஹாப், அப்சலின் ஆள். அவனுக்கு எந்தவிதமான சந்தேகமும் வந்துவிடக் கூடாதே
என்றுதான் நானே அவங்களைக் கொன்னுட்ட மாதிரி நடிக்க வேண்டியதாயிடுச்சு.’’
‘‘ஸாரி. நான் உங்களைத் தப்பா நினைச்சிட்டேன்.’’
‘‘நீங்க அப்படி தப்பா நினைச்சதுதான் என்னோட
ப்ளஸ் பாயின்ட். பை தி பை நம்ம டீப்சைலன்ஸர் ஜாமரிலிருந்து இன்டர்நெட், செல்போன், இணைப்
புக்கு விடுதலை கொடுத்துடலாமா?’’
‘‘ப்ளீஸ்... நான் மொதல்ல வீட்டுக்குப் பேசணும். அப்புறம் கனடாவில் இருக்கிற
சகாதேவ் கிட்ட பேசணும்.’’
‘‘மொதல்ல வீட்டுக்கு போன் பண்ணி அப்பா
வோட ஹெல்த் கண்டிஷன் எப்படியிருக்குன்னு கேளுங்க. அப்புறம் உங்க உட் பி சகாதேவ்கிட்ட பேசுங்க. இப்படிநான் சொல்றதுக்குக் காரணம் இருக்கு.’’
‘‘என்ன காரணம்?’’
‘‘கனடாவில் சகாதேவை ஃபாலோ பண்ணிட்டுருக்கிற ஜான் ஸ்மித் ஒரு ப்ரொபஷனல் கில்லர் கிடையாது.’’
‘‘தென்..?’’
‘‘என்னோட ஃப்ரெண்ட். ‘ ப்ளூ க்ரிஸ்டல் டெக்’ கம்பெனியில் கார்ப்பரேட் எக்சிகியூடிவ்ஆபீஸர்.’’
‘‘வாவ்!’’ என்று தன்னையும் அறியாமல் கத்திய மஹிமா தனது வலதுஉள்ளங்கையில் உதடுகளைப் பதித்து காற்றுக்கு ஒரு முத்தத்தைத் தாரை வார்த்தாள்.
(நிறைவு)

x